செய்திகள் :

புகைச்சல்! - சிறுகதை | My Vikatan

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்.

விடிந்தால் போகிப் பண்டிகை.

பொதுப் பணிகளையெல்லாம் முடித்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார் கவுன்சிலர் கதிரேசன்.

வழக்கமாக, “தாத்தா..!” என்று ஓடிவந்து கழுத்தைக் கட்டிக் கொண்டு கொஞ்சும் பேத்தி சிந்து, இன்று கதிரேசனின் எதிரில் வரவில்லை. 

``காபி கொண்டாரட்டுங்களா..?” என்று கேட்டுக் கொண்டே வரும் மருமகளையும் காணோம்.

‘ஒரு வேளை பேத்தி இன்னும் பள்ளிக்கூடம் விட்டு வரவில்லையோ..?’ என்று ஒரு கனம் யோசித்தார்.

சிந்துவின் காலணிகள் ஹாலில் இருந்தததைப் பார்த்ததும், பேத்தி வந்துவிட்டதை உறுதி செய்து கொண்டார் கதிரேசன்.

‘பேத்தி ஏன் வரலை..? உடம்புக்கு ஏதும் சரியில்லையோ..?’ என்று கவலைப்பட்டார். 

ஹாலில் இருந்து எழுந்து சென்று, சிந்துவின் அறையை அடைந்தார். 

சிந்து இவர் முகத்தைப் பார்க்காமல் வேறுபுறம் திருப்பிக் கொண்டாள்.

மருமகளும் இவரைப் பார்க்காமல் தரையைப் பார்த்தபடி இருந்தாள்.

“என்னாச்சு சிந்து..? ஏன் தாத்தாகிட்டே பேச மாட்டேங்கிறே..?” ஆதங்கத்துடனும் பரபரப்புடனும் கேட்டார் கதிரேசன். 

“சிந்து உங்ககிட்டேப் பேசவே மாட்டாளாம். என்னையும் உங்ககிட்டே பேசக் கூடாதுன்னு உத்தரவு போட்டுட்டா..!” என்றாள் மருமகள்.

“ஏன்..? எதுக்கு அப்படி சொன்னா அவ..?” கதிரேசனின் குரல் உடைந்து வந்தது.

“நீங்களே அவ கிட்டே கேளுங்க.. என்று சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறினாள் மருமகள்.

சித்தரிப்புப் படம்

கவுன்சிலர் கதிரேசன் மிகப் பிரபலமான மனிதர்.

இதுவரை அந்த வார்ட்டில் கதிரேசனைத் தவிர வேறு கவுன்சிலர்கள் இருந்ததே இல்லை. 

ஆட்சிகள் மாறினாலும், கூட்டணிகள் மாறினாலும், கதிரேசனைத்தான் மக்கள் தேர்ந்தெடுத்தார்கள். 

பல முறை, போட்டி ஏதுமின்றியே தேர்ந்தெடுக்கப்பட்டவர் அவர். ஒரு சில முறை மட்டும், ஆளும் கட்சிக்காரர்கள் வீம்புக்காக போட்டியாளரை நிறுத்தினார்கள். இறுதியில் வெற்றி பெற்றது என்னவோ கதிரேசன்தான்.

கோவில் திருவிழாக்களான, தேரோட்டம், தெப்பம், தீமிதி.. போன்ற அனைத்து ஊர் பொதுச் செயல்பாடுகளையும் மிகவும் சிரத்தையாகத் தொடங்கி வைப்பதும், ஊரில் யார் வீட்டில் நல்லது-கெட்டது என்றாலும், முதல் மனிதராகப் போய் நிற்பதும் கதிரேசனின் ரத்தத்தில் ஊறிய விஷயம்.

கதிரேசன் ஊர் மக்களை மதித்ததால், ஊர் மக்களும் அவரைக் கொண்டாடினர்.

தொன்று தொட்டு கிராமங்களில் செயல்பட்டு வரும் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் கடைபிடித்தே தீரவேண்டும் என்ற வகையில், கதிரேசன் ஒரு பிடிவாதக்காரர். 

யாருக்காகவும் எதற்காகவும் தன் பிடிவாதத்தை மாற்றிக் கொள்ளவே மாட்டார். 

முன்னோர்கள் செய்ததை நாமும் செய்ய வேண்டும் என்று வரட்டுப் பிடிவாதம் செய்வார். காலத்திற்குத் தகுந்தாற்போல் மாற வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள மாட்டார் கதிரேசன். 

யாராவது எதிர் வாதம் பேசினால், ``நம் முன்னோர்கள் தெரியாமலா இதையெல்லாம் உருவாக்கினாங்க..” என்று வாயடைத்துவிடுவார்.

***

சித்தரிப்புப் படம்

விடிந்தால் போகித்தீச் சடங்கு.

ஊர் உலகமெல்லாம், கார்த்திகை மாதம் சொக்கப்பனை பிரசித்தம் போல, இந்த ஊரில் போகித் தீ மூட்டல் அவ்வளவு பிரசித்தம். 

போகிப் பண்டிகையன்று ஊர் எல்லை வெட்ட வெளியில் போகித் தீ பற்றவைத்து, போகியலைக் கொண்டாடுவதில் அவருக்கு அப்படியொரு மகிழ்ச்சி.

‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்ற கோட்பாட்டில் மிகவும் தீவிரமானவர் என்றாலும், சில பழைய வழக்கங்களை கழிக்காமல், பின்பற்றப்படும் அவர் செயல்பாடுகளைப் பார்க்கும்போது முரண் தொடையாக இருக்கும். 

பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை ஊர் எல்லையில் வீடுகள் இல்லை. வெறும் வெட்ட வெளியாகத்தான் இருந்தது. 

நாளாவட்டத்தில், அந்தச் சமுதாய நிலத்தைப் பிரித்து, ஏழை மக்களுக்கு பட்டா கொடுத்தது அரசு. தற்போது நிறைய வீடுகள் அங்கே வந்துவிட்டன. 

இருந்தாலும் இப்போதும் அங்கே பார்க், வாட்டர் டாங்க் ஆகியவற்றுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் அரசுப் புறம்போக்கு நிலத்தில் ஊர் குப்பைகளைப் போட்டுக் கொளுத்துவதால் சுற்றிலும் குடியிருக்கும் மக்கள் புகை மாசால் திணறினாலும், இந்த இடத்தில் தங்களுக்குப் பட்டா நிலம் பெற முழு முதற் காரணமாக இருந்த கதிரேசனின் போகித்தீச் சடங்கை பொறுத்துக் கொண்டார்கள். 

***

“பொங்க வேலை தொடங்கியாச்சு..” என்று பொங்கலுக்கு ஒரு வாரம் முன்பே ஊர் முழுவதும் பேச்சு அடிபடத் தொடங்கும். ஒட்டடை அடித்தல், பெயர்ந்த தரை மற்றும் சுவர்களுக்கு சேறு குழைத்துப் பூசுதல், சுண்ணாம்புப் பட்டை, காவிப் பட்டை தீட்டுதல், என மும்மரமாக வேலைகள் நடக்கும்.

பழைய பாய்கள், கிழிந்த தலையணை உரைகள், பழைய துணிகள் இப்படி மீண்டும் பயன்படுத்த முடியாத பல பொருட்களை ஒவ்வொரு நாளும் வீட்டிலிருந்து அப்புறப் படுத்துவார்கள். அப்புறப்படுத்தியதை அள்ளிக் கொண்டு வந்து, ஊர் கூடி போகித்தீ மைதானத்தில் கொண்டு வந்து போட வேண்டும் என்பது ஊர் கட்டுப்பாடு என்பதால் ஒவ்வொரு நாளும் அம்பாரமாகக் குப்பைகள் வந்து குவிய ஆரம்பித்துவிடும்.

போகியன்று காலை ஊரே அங்கு திரண்டிருக்க, கவுன்சிலர் கதிரேசன் தீ வைத்து, போகித் தீயை வளர்ப்பார். 

***

சிந்துவுக்கு துக்கம் துக்கமாக வந்தது.

காரணம், பள்ளியில் இன்று நடை பெற்ற புகையில்லா போகி என்ற நிகழ்ச்சிக்குப் பிறகு, ஊர்கோடியில் குடியிருக்கும் தன் வகுப்புத் தோழிகள் இரண்டு பேர் அவளிடம் பேசியதுதான்.

“ஏண்டீ சிந்து.. உங்க தாத்தா ஏண்டீ இப்படி இருக்காரு?”

“என்னடீ சொல்றீங்க? தாத்தா என்னடீ செஞ்சாரு. ஏன் இப்படிக் கேட்கறே..?”

“இன்னிக்குப் புகையில்லா போகி நிகழ்ச்கைல என்ன சொன்னாங்க? மக்கும் குப்பை மக்காக் குப்பைனு ஒதுக்கி வெச்சிட்டா, அதைத் தூய்மைப் பணியாளர்கள் கொண்டு போய் திடக்கழிவு மேலாண்மைக் கிடங்குல போட்டு, அதை முறைப்படி ‘டீ கம்போஸ்’ ஆக்கி, விவசாயத்துக்குத் தேவையான இயற்கை  உரமா மாத்துவாங்கனு சொன்னாங்கதானே..?"

“போகிப் பண்டிகை நாளில் குப்பைகளை கொளுத்தி புகை மாசு ஏற்படுத்தாம, குப்பைகளை கிடங்குகளுக்கு  அனுப்புங்க” னு விழாவுக்கு தலைமை தாங்கின மாவட்டக் கலெக்டரே சொன்னாங்கதானே; 

ஏண்டீ சிந்து உங்க தாத்தா மட்டும் கலெக்டரே சொன்னாலும் கேட்க மாட்டாங்கறாரு?”

சிந்து வெட்கத்தால் தலை குனிந்தாள்.

சிந்துவுக்குத் தன் தாத்தாவின் போகித்தீ பற்ற வைத்தல் நிகழ்ச்சியை நினைத்தாலே அறுவருப்பாக இருந்தது. 

“உங்க தாத்தா போகிக் குப்பையை எரிக்கறதனால, சுற்றிலும் இருக்கற குடியிருப்புல இருக்கற நாங்க, வருஷா வருஷம் நிம்மதியா பொங்கலேக் கொண்டாட முடியறதுல்ல..!” என்று தோழிகள் சொன்னது மயூரியின் நெஞ்சைப் பிழிந்தது.

***

சித்தரிப்புப் படம்

பள்ளியிலிருந்து ஒரு வைராக்யத்துடன் வீட்டுக்கு வந்த மயூரி, தன் தாயாரிடம் பள்ளியில் கலெக்டர் முன்னிலையில் நடைபெற்ற ‘புகையில்லா போகி’ என்ற நிகழ்ச்சி பற்றியும், நிகழ்ச்சி முடித்த பிறகு, தன் தோழிகள் தன்னிடம் பேசியது பற்றியும், பள்ளி விட்டு வரும்போது, ஊர் கோடியில் மலைபோலக் குவிந்திருந்த குப்பைகளை பார்த்துவிட்டு வந்ததையும் சொல்லி, தாத்தா செய்யறது தப்பும்மா..!” என்றாள்

“தாத்தா வயசுல பெரியவங்க. தாத்தாவை அப்படியெல்லாம் பேசக்கூடாது.” என்று  தொடங்கிய அம்மாவின் பேச்சில் குறுக்கிட்டாள் மயூரி. “அம்மா, வயசுல பெரியவரா இருந்தாலும், செய்யறது தப்புன்னு புரிய வைக்கறதுதான்மா சரி.”

“மயூரி, அந்த ஏரியாவுல குடியிருக்கற எல்லாரும் பாதிக்கப்படறாங்கனு, எத்தனையோ பேரு சொல்லிட்டாங்க. உங்க தாத்தாவுக்கு இருக்கற செல்வாக்குனால அவர் யார் சொல்லியும் கேட்கலை. நீ சொன்னா மட்டும் கேட்டுடப் போறாரா..? அதை விடு, பள்ளிக்கூடத்துலேர்ந்து பசியோட வந்திருப்பே. ஸ்நாக்ஸ் எடுத்துக்கோ.” என்று சமாதானப்படுத்தினாள் அம்மா.

“நாளைக்கு போகித்தீ எரியாது’னு தாத்தா சொல்ற வரைக்கும் நான் எதுவும் சாப்பிட மாட்டேன் தாத்தாகிட்டே பேசவும் மாட்டேன். நீயும் தாத்தாகிட்டே பேசவேக் கூடாது.” என்று சொல்லிவிட்டு வைராக்யமாக படுத்து விட்டாள் சிந்து. 

மருமகளின் மூலம் செய்தியை அறிந்த கதிரேசன், தன் தவறை உணர்ந்தார். 

முனிசிபல் கவுன்சிலரோடு, தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஊர் கோடியில் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளை திடக்கழிவு மேலாண்மைக் கிடங்குக்கு எடுத்துச் செல்ல ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

‘பல முறை தான் நேரில் கேட்டுக் கொண்டும் குப்பைகளை கிடங்குக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்காத கவுன்சிலர் கதிரேசன், யார் சொல்லி இந்த முடிவுக்கு வந்தார்..?’ என்று யோசித்தார். 

‘மனம் மாறுவதற்குள் காரியத்தை செய்துவிடவேண்டும்..’ என்று துரிதமாக இரண்டு மூன்று வாகனங்களையும் பல துப்புறவுத் தொழிலாளர்களையும் அனுப்பி மொத்தக் குப்பைகளையும் கிடங்குக்கு அனுப்ப ஆவண செய்தார்.

***

சித்தரிப்புப் படம்

செய்தி வாட்ஸ் அப்பில் வைரலானது. 

குப்பைகளை கிடங்குக்கு அனுப்புவீர்.. புகைச்சலில்லா போகி கொண்டாடுவீர்… 

என்ற தலைப்பில் முன்னோடி கிராமமாக அந்த ஊரை பேசியது பல செய்திச் சேனல்கள்.

ஊரில் எல்லோருக்குமே, கதிரேசனின் இந்த முடிவு மிகவும் புதிராக இருந்தாலும், அனைவருக்கும் சந்தோஷமாகவும் இருந்தது.

Vox Pop என்ற பொது வெளியில் மக்களைக் கருத்து கேட்டு ஒளி பரப்பில், “இந்த போகிப் பண்ணிகை புகைச்சலில்லா போகிப் பண்டிகையாகக் கொண்டாட வழி செய்த எங்க வார்டு கவுன்சிலர் கதிரேசன் அவர்களுக்கு நன்றி” என்று ஊர் கோடிக் குடியிருப்பு வாசிகள் சொன்னபோது உண்மையிலேயே நெகிழ்ந்து போனார் கதிரேசன். 

சமூக ஊடகங்களில் இந்த மகிழ்ச்சியான செய்தியைப் பார்த்தபின் சிந்து, ஓட்டமாய் ஓடி வந்து “தாத்தா” என்று கழுத்தைக் கட்டிக் கொண்டு கொஞ்சியபோது நெகிழ்ச்சி பன் மடங்கு அதிகமானது கதிரேசனுக்கு.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

மார்பிலே பட்ட காயம்! - ஒரு ராணுவ வீரரின் கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

கடைசி மூச்சு; கேள்விக்கு விடை சொன்ன தருணம்... மரணத்தின் வாசம் - சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

டாக்டர் ஊசீஸ்வரனின் கணக்கு வாத்தியார் - சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

கழிவறைப் பேய் - குறுங்கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க