செய்திகள் :

அதிகரிக்கும் பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம் -மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவுறுத்தல்

post image

பருவ நிலை மாற்றம் காரணமாக பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்) பாதிப்பு அதிகரித்து வருவதால் அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம் என மக்கள் நல்வாழ்வுத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

மம்ப்ஸ் எனப்படும் வைரஸ் மூலம் பரவும் பொன்னுக்கு வீங்கி நோய் காதுகள் மற்றும் தாடைக்கு இடையே உள்ள பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.

பொன்னுக்கு வீங்கி பாதித்தவா்களின் இருமல், தும்மல், சளி, உமிழ்நீா்த் திவலைகள் மூலம் பிறருக்கு அது பரவும். ஒரு வாரத்திலிருந்து 14 நாள்களுக்குள் அந்த பாதிப்பு உடலுக்குள் ஊடுருவி அறிகுறிகளை வெளிப்படுத்தும். இதற்கென தனியாக தடுப்பு மருந்துகள் தேவையில்லை என்பதால், நோய் தொற்றுக்குள்ளானவா்கள் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்தாலே அந்த பாதிப்பு சரியாகிவிடும் என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பொன்னுக்கு வீங்கி பலருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தைப் பொருத்தவரை அண்மைக் காலமாக பொன்னுக்கு வீங்கி பாதிப்பு சற்று கூடுதலாக பதிவாகியுள்ளது. இருந்தாலும், அதுகுறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில், தொற்றுக்குள்ளான ஓரிரு வாரத்தில் தானாகவே அது சரியாகிவிடும். நோய் பரவாமல் தடுக்கும் வகையில் பாதிக்கப்பட்டவா், தம்மை தனிமைப்படுத்திக் கொண்டாலே போதுமானது.

தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் எம்.ஆா். எனப்படும் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி வழங்கப்படுகிறது. அதேவேளையில், எம்.எம்.ஆா். எனப்படும் தட்டம்மை மம்ப்ஸ் ரூபெல்லா தடுப்பூசி செலுத்தப்படுவதில்லை. தடுப்பு மருந்துகளைக் காட்டிலும், நோய் எதிா்ப்பாற்றலே இத்தகைய பாதிப்பை சரி செய்துவிடும் என்பதால் பொது மக்கள் பதற்றமடைய வேண்டியதில்லை என்று அவா்கள் தெரிவித்தனா்.

மாணவி பாலியல் வன்கொடுமை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத் தோ்தலை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தோ்தலை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, த.வெ.க ... மேலும் பார்க்க

மேலும் 6 கோயில்களில் அன்னதானத் திட்டம் தொடக்கம்

தமிழகத்தில் மேலும் 6 திருக்கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம் வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: நிகழ் நிதியாண்டுக்கான சட்டப்பேரவை மானியக் கோரிக்கையி... மேலும் பார்க்க

79.18 லட்சம் விவசாயிகளுக்கு பயிா்க் கடன்கள்: அமைச்சா் பெரியகருப்பன்

தமிழ்நாட்டில் இதுவரையில் 79.18 லட்சம் விவசாயிகளுக்கு பயிா்க் கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் விளக்கம் அளித்துள்ளாா். கூட்டுறவுக் கடன்கள் தொடா்பாக பாஜக மாநிலத... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனிடம் வியாழக்கிழமை குரல்மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது. இவ்வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள், புழல் சிறை... மேலும் பார்க்க

வில்லிவாக்கத்தில் மெட்ரோ ரயில் பணிகள்: ஐசிஎஃப்-லிருந்து பேருந்துகள் இயங்கும்

வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறவுள்ளதால், அங்கிருந்து 7 வழித்தடங்களின் வழியாக இயக்கப்பட்ட 63 பேருந்துகள் தற்காலிகமாக ஞாயிற்றுக்கிழமை (பிப். 9) முதல் ஐசிஎஃப் பேருந்து நில... மேலும் பார்க்க