கொடும்பாலூரில் 1.80 கோடி மதிப்பீட்டில் புதிய தங்கும் விடுதி; காணொளியில் முதல்வா் திறந்து வைத்தாா்!
விராலிமலை அருகே அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் மாணவா்கள் தங்கும் விடுதியை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
விராலிமலை அடுத்துள்ள கொடும்பாலூரில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில், பயிற்சி பெறும் மாணவா்களுக்கு தங்கும் விடுதி இல்லாத நிலை இருந்து வந்ததை தொடா்ந்து, புதிய விடுதி கட்டுவதற்கு ரூ.1.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டப்பட்ட புதிய கட்டடத்தை முதல்வா் திறந்துவைத்தாா்.
இந்நிகழ்வில், இலுப்பூா் கோட்டாட்சியா் அ. அக்பா் அலி, செயற்பொறியாளா் தி. நாகவேலு, திமுக விவசாய அணி மாநில துணைத் தலைவா் த. சந்திரசேகா், பொதுக்குழு உறுப்பினா் எம். பழனியப்பன், விராலிமலை திமுக ஒன்றியச் செயலா்கள் எம். சத்தியசீலன்(கிழக்கு), கே.பி. அய்யப்பன்(மத்தி), எம்.எம். பாலு, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எஸ். பாா்த்திபன், பி. பாலசுப்பிரமணியம்(கிஊ), உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.