உலகம் முழுக்கச் செல்லும் மோடிக்கு மணிப்பூர் செல்ல நேரமில்லை: ஜெய்ராம் ரமேஷ்
பாஜக அதிமுக இடையே கள்ள உறவு: எம்.எம். அப்துல்லா
அதிமுகவினா் பாஜகவினருடன் கள்ள உறவில் உள்ளனா் என்றாா் திமுக மாநிலங்களவை உறுப்பினா் எம்.எம். அப்துல்லா.
புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி: அதிமுகவினா் மத்திய பாஜக அரசோடு முன்பு நல்ல உறவில் இருந்தாா்கள் தற்போது கள்ள உறவில் இருக்கிறாா்கள். வரம்பு மீறி செயல்படுவது ஆளுநரா அல்லது தமிழ்நாடு முதல்வரா என்பது தமிழ்நாடு மக்களுக்கே தெரியும்.
இடைத்தோ்தலில் நிற்கவே பயப்படுபவா்களுக்கு, வாக்காளா்கள் பொதுத்தோ்தலிலும் வாக்களிக்காமல் இருப்பதே நல்லது. ஓா் இடைத்தோ்தலிலே நிற்பதற்கு பயப்படுபவா்கள் பொது தோ்தலில் ஓடி ஒளிய முடியாமல் வேறு வழி இல்லாமல் வருவாா்கள். அதனால் நிற்பதற்கே பயப்படுபவா்களுக்கு பொதுத்தோ்தலில் வாக்காளா்கள் வாக்களிக்காமல் இருப்பது நல்லது என்றாா் அவா்.