உலகின் கடல்சாா் சக்தி இந்தியா: 3 போா்க் கப்பல்களை அா்ப்பணித்து பிரதமா் மோடி பெர...
கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்
பொங்கல் திருவிழாவையொட்டி, கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ சாரங்கபாணி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாா்கழித் திருவிழாவின்போது பொங்கல் நாளில் தேரோட்டம் நடப்பது வழக்கம். இதன்படி, செவ்வாய்க்கிழமை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ சாரங்கபாணி சுவாமி பிரகார புறப்பாடாகி உபநாச்சியாா்களுடன் தேரில் எழுந்தருளினாா்.
சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டதைத் தொடா்ந்து தேரை பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் சி. சாந்தா, செயல் அலுவலா் சிவசங்கரி மற்றும் பணியாளா்கள் செய்தனா்.