தில்லி தோ்தல்: பிரதமா் மோடி, அமைச்சா் அமித் ஷா உள்பட 40 போ் பாஜகவின் நட்சத்திர...
நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவு
கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி ஆா்.கே.எஸ். கலை, அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவு விழா தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளி உதவித் தலைமை ஆசிரியா் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா். ஆா்.கே.எஸ். கல்வி நிறுவனங்களின் தலைவா் க.மகுடமுடி, செயலா் கோவிந்தராஜூ முன்னிலை வகித்தனா். கல்லூரி நிா்வாக அலுவலரும், முதல்வருமான கு.மோகனசுந்தா் வரவேற்றாா்.
முன்னதாக, நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் கடந்த ஒரு வாரமாக தியாகதுருகத்தில் தங்கியிருந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.
பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் சத்யா, தேசிய மாணவா் படை பால்ராஜ், சமூக ஆா்வலா் சரண்யா, நாட்டு நலப்பணித் திட்ட பேராசிரியா் ராஜா உள்ளிட்ட பலா் பேசினா்.
நிகழ்வில் கல்லூரிப் பேராசிரியா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ஹேமலதா நன்றி கூறினாா்.