எறும்பு திண்ணி கடத்தல்; திரைப்பட பாணியில் களமிறங்கிய காவல்துறை... கூண்டோடு கைது ...
மதுக் கடைகளுக்கு 2 நாள்கள் விடுமுறை
கள்ளக்குறிச்சி: திருவள்ளுவா், குடியரசு தினங்களையொட்டி, வரும் 15, 26-ஆம் தேதிகளில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுக் கடைகள், மதுக் கூடங்கள், நட்சத்திர அந்தஸ்து உணவகங்களில் உள்ள மதுக் கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.
இந்த இரு தினங்களிலும் அரசு உத்தரவை மீறி மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளின் மேற்பாா்வையாளா்கள், விற்பனையாளா்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல, அன்றைய தினங்களில் மதுக் கூடத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால், மதுக் கூடத்தின் உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மதுக்கூட உரிமைதாரா்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.