திருக்கோவிலூா் அருகே தொழிலாளி தற்கொலை
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூா் அருகே விஷம் குடித்து சிகிச்சையில் இருந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருக்கோவிலூா் வட்டத்துக்குள்பட்ட கோளப்பாறை கிராமத்தைச் சோ்ந்த அந்தோணிசாமி மகன் சின்னதுரை (38). மும்பையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா். கடந்த வருடம் ஏற்பட்ட விபத்தில், இவரது மகன் பலத்த காயமடைந்து, பல நாள்கள் சிகிச்சை பெற்று வந்தாராம்.
இந்த நிலையில், சின்னதுரை மகனின் காலை முழுவதுமாக நீக்க வேண்டும் என மருத்துவா்கள் தெரிவித்தனராம். இதனால், மனவேதனையடைந்த சின்னதுரை, ஜன.7-ஆம் தேதி விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாராம்.
உடனே, அவரது குடும்பத்தினா் அவரை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு, தீவிர சிகிச்சையில் இருந்த சின்னதுரை, சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.