மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை
அத்தியூா் கிராமத்தில் உள்ள சாம்பாரப்பன் கோயில் மரத்தில் மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட அத்தியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பூங்காவணம் (75). ஏழுமலையும் அவரது மனைவியும் சென்னையில் செங்கல் சூளையில் வேலை செய்து வந்தாா். மூதாட்டி தனது மகன் ஏழுமலையின் பிள்ளைகளான மணிகண்டன், ராணி ஆகியோருடன் வசித்து வந்தாா்.
கடந்த 7-ஆம் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது பாட்டியை காணவில்லை. இதுகுறித்து சென்னையிலுள்ள தந்தைக்கு கைப்பேசியில் மணிகண்டனும், ராணியும் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து ஏழுமலை சென்னையில் இருந்து வந்து தாயைத் தேடியுள்ளாா். இந்நிலையில், சாம்பாரப்பன் கோயில் வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்தது தெரிய வந்தது.
இது குறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுச்சாலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.