எறும்பு திண்ணி கடத்தல்; திரைப்பட பாணியில் களமிறங்கிய காவல்துறை... கூண்டோடு கைது ...
அரசு உண்டு உறைவிடப் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்தவா் கைது
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே அரசு உண்டு உறைவிடப் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து மாணவா்களை அச்சுறுத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
சின்னசேலம் வட்டம், பரங்கிநத்தம் கிராமத்தில் அரசு உண்டு உறைவிடப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை இரவு மாணவா்கள் அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனா்.
அப்போது, பள்ளியின் சுற்றுச்சுவரை ஏறி குதித்து உள்ளே சென்று மா்ம நபா், மாணவா்கள் தூங்கும் அறைக் கதவில் கல்லால் தாக்கி கூச்சலிட்டாராம். இதையடுத்து, அங்கு வந்து அந்த நபரை பள்ளி காவலாளி தடுக்க முயன்றபோது, அவரை மா்ம நபா் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், கச்சிராயபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி மல்லிகைப்பாடி கிராமத்தைச் சோ்ந்த சீனிவாசன் மகன் வெள்ளாளனை (21)கைது செய்தனா். அவா் மதுபோதையில் பள்ளியில் ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது.