அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சீறிய TTV தினகரன் காளை; நின்று விளையாடிய VK சசிகலா காள...
மாற்றுத் திறனாளிகளுக்கு அதிநவீன சக்கர நாற்காலிகள்: ஆட்சியா் வழங்கினாா்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்து, வருவாய்த் துறை நிலப் பட்டா, பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை, முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள், மாற்றுத் திறனாளிகள் அளித்த 86 மனுக்களை பெற்றுக்கொண்டாா்.
தொடா்ந்து, தண்டுவடம் பாதித்த 2 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1,10,000 மதிப்பீட்டிலான பேட்டரியால் இயங்கும் அதிநவீன சக்கர நாற்காலிகளை ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன், தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) குப்புசாமி உள்ளிட்ட பல்வேறு துறைசாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.