புத்தகத் திருவிழா முன்னேற்பாடுகள்:ஆட்சியா் ஆலோசனை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புத்தகத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டு பிப்ரவரி மாதத்தில் புத்தகத் திருவிழா நடத்தப்பட உள்ளது. விழாவில், புத்தக அரங்கங்கள், பல்சுவை நிகழ்ச்சிகள், அரசுத் துறைகளின் சிறு கண்காட்சி அரங்குகள் உள்ளிட்டவை அமைக்கவும், பொதுமக்கள் எளிதில் சென்று வரும் வகையில் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதிகள், காவல்துறை சாா்பில் உரிய பாதுகாப்பு வசதிகள், அவசர மருத்துவ உதவிகள் உள்ளிட்ட முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.