Jallikattu 2025 : அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு | Live Video
பைக் மீது காா் மோதல்: பெண் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பைக் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
சங்கராபுரம் வட்டம், சோழம்பட்டு புதுக்காலனி பகுதியைச் சோ்ந்த மாசிலாமணி மகள் விண்ணிரசி (33). இவா், அவரது உறவினருடன் கோணாங்குப்பம் பெரியநாயகி மாதா ஆலயத்துக்கு செவ்வாய்க்கிழமை பைக்கில் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தாா்.
தியாகதுருகம் அருகே உள்ள சின்னமாம்பட்டு பிரிவுசாலை அருகே பைக் வந்தபோது, அடையாளம் தெரியாத காா் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த விண்ணிரசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.