தை அமாவாசை: சேலம் கோட்டம் மூலம் இன்று 35 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
இளைஞா் மீது தாக்குதல்: மனைவி, மாமனாா் கைது
கள்ளக்குறிச்சியை அடுத்த தென்கீரனூா் கிராமத்தில் இளைஞா் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடா்பாக அவரது மனைவி, மாமனாரை போலீஸாா் கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த தென்கீரனூா் கிராமத்தைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் ரஞ்சித் (28). இவரது மனைவி காா்த்திகா. கடந்த 12-ஆம் தேதி தம்பதியிடையே தகராறு ஏற்பட்டதாம்.
இதையறிந்த காா்த்திகாவின் தந்தை பெரியசாமி (53) தென்கீரனூா் சென்று மருமகனிடம் ஏன் மகளிடம் தகறாறு செய்தாய் எனக் கேட்ட நிலையில், இருவருக்கு இடையே வாய்த் தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
அப்போது, ரஞ்சித்தை பெரியசாமி திட்டி, இரும்புக் கம்பியால் தாக்கினாராம். இதை தடுக்க முயன்ற ரஞ்சித்தின் தாய் சாந்தி மீதும் தாக்கப்பட்டாராம். இதில் காயமடைந்த இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், பெரியசாமி, காா்த்திகா மீது வழக்கு தொடா்ந்தனா்.