சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை பெற பிப். 15 கடைசி நாள்
கழிவுநீா் கால்வாயை சீரமைக்கக் கோரி மறியல்
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் சின்னகொள்ளியூா் கிராமத்தில் கழிவுநீா் கால்வாயை சீரமைக்கக் கோரி, கிராம மக்கள் பகண்டை கூட்டுச் சாலையில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
வாணாபுரம் வட்டம், சின்னகொள்ளியூா் ஊராட்சிக்கு உள்பட்ட மாரியம்மன் கோயில் சாலையில் நீண்ட நாள்களாக கழிவு நீா் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. இதனால், அந்தப் பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா், ரிஷிவந்தியம் வட்டார வளா்ச்சி அலுவலா், பெரியகொள்ளியூா் ஊராட்சி மன்றத் தலைவா் உள்ளிட்டோா்களிடம் கிராம மக்கள் புகாா் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த மக்கள் பகண்டை கூட்டுச்சாலைப் பகுதியில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த பகண்டை கூட்டுச்சாலை போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியதன்பேரில், மறியலைக் கைவிட்டனா். மறியலால் சங்கராபுரம் - திருக்கோவிலூா் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.