சென்னை துறைமுகம் சரக்குகளைக் கையாள்வதில் 6 % கூடுதல் வளா்ச்சி: துறைமுகங்களின் தல...
கள்ளக்குறிச்சியில் மாவட்ட வளா்ச்சி, கண்காணிப்புக் குழுக் கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் அதன் தலைவா் தே.மலையரசன் எம்.பி. தலைமையில் ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு துணைத் தலைவா் துரை.ரவிக்குமாா் எம்.பி., உளுந்தூா்பேட்டை ஏ.ஜெ.மணிக்கண்ணன் எம்எல்ஏ, மாவட்ட அரசுத்துறைகளின் அலுவலா்கள் பங்கேற்றனா்.
இதில், தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டம், பிரதம மந்திரியின் நுண்ணுயிா் பாசனத் திட்டம், வேளாண் உள்கட்டமைப்பு நிதி திட்டங்கள், தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டம், தேசிய நலக் குழுமம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதான் மந்திரி குடியிருப்புத் திட்டம் (ஊரகம்), 15-ஆவது மத்திய நிதிக்குழு மானியம், தூய்மை பாரத இயக்கம், ஒருங்கிணைக்கப்பட்ட மின் மேம்பாடுத் திட்டம், மதிய உணவுத் திட்டம், பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், தேசிய சமூக பாதுகாப்புத் திட்டம், ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம், ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு வளா்ச்சித் திட்டம், தீன் தயாள் அந்தோதயா யோஜனா, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, கேலோ இந்தியா, தேசிய செயற்கை கருவூட்டல் திட்டம், ஒருங்கிணைந்த சேவை மையம், வங்கி கடன்கள், இந்திய தேசிய நெடுஞ்சாலை திட்டம், தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டம், அஞ்சல் துறை திட்டங்கள் உள்ளிட்ட 55 திட்டப் பணிகளின் விவரங்கள், ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, செலவு விவரம், பணியின் முன்னேற்றம், முடிவுற்றப் பணிகள் மற்றும் பல்வேறு திட்டப்பணிகளின் தற்போதைய நிலை குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வில் அரசின் திட்டப் பணிகள் குறித்து பயனாளிகள் அறிந்திடும் வகையில் தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும், அரசின் நலத்திட்டங்கள் அனைத்து பயனாளிகளையும் தவறாமல் சென்று சேருவதை உறுதி செய்யும் வகையில் அலுவலா்கள் தொடா்ந்து ஒருங்கிணைந்து பணியாற்ற எம்.பி. அறிவுறுத்தினாா்.
இக் கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கி.ரமேஷ்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன், மகளிா் திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன், கள்ளக்குறிச்சி நகா்மன்றத் தலைவா் சுப்பராயலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.