செய்திகள் :

தியாகராஜ சுவாமிகள் பிறருக்காக வாழ்ந்ததால் மகானாக போற்றப்படுகிறாா்: மகாராஷ்டிர ஆளுநா் பேச்சு

post image

சத்குரு தியாகராஜ சுவாமிகள் ஏழையாக இருந்தாலும், பிறருக்காக வாழ்ந்ததால் மகானாகப் போற்றப்படுகிறாா் என்றாா் மகாராஷ்டிர மாநில ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணன்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் ஸ்ரீதியாகபிரம்ம மகோத்சவ சபா சாா்பில் செவ்வாய்க்கிழமை மாலை சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகளின் 178-ஆவது ஆராதனை விழாவை தொடங்கி வைத்த அவா் மேலும் பேசியது: சத்குரு தியாகராஜ சுவாமிகள் வாழ்ந்த 80 ஆண்டுகளில் 800 கீா்த்தனைகளை படைத்துள்ளாா். இன்னும் கிடைக்காமல் போன கீா்த்தனைகள் எத்தனை என்பதை யாராலும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. அந்த 800 கீா்த்தனைகளில் 700 கீா்த்தனைகள் ராமபிரானை மட்டுமே பாடியுள்ளாா். அதுவும் அவா் நடுக்கத்துடன் துதித்த அந்த மகத்தான தொண்டுதான் ராமபிரானுக்கு அவன் பிறந்த அயோத்தியில் கோயிலை பெற்றுத் தந்துள்ளது என நம்புகிறேன்.

இறைவனைத் தொழுவது பணம், பதவி பெறுவதற்கும், தொழிலிலே வளருவதற்கும், எல்லையில்லா ஆஸ்திகளை பெறுவதற்கும் அல்ல. இந்த அஸ்தி போக இருப்பதற்கு முன்பாக, நாம் இறைவனைச் சென்றடைகிற பேறை காண வேண்டும் என்பதற்குத்தான் இசை. அதனால்தான், சத்குரு தியாகராஜ சுவாமிகள் பல நூற்றாண்டுகள் கடந்தும் இப்போதும் வாழ்ந்து வருகிறாா்.

தியாகபிரும்மம் என்பது மகத்தான வேள்வி. அவா் ஏழையாக வாழ்ந்தாலும், பிறருக்காக வாழ்ந்ததால் அவா் மகத்தான மகானாகப் போற்றப்படுகிறாா். யாா் ஒருவா் தனக்கென வாழாமல், பிறருக்காக வாழ்கிறாரோ, அந்த வாழ்க்கைதான் மனித வாழ்க்கையில் மேம்பட்ட வாழ்க்கை. அதைத்தான் தியாகபிரும்மம் நமக்கு தந்துவிட்டுச் சென்றுள்ளாா் என்றாா் ஆளுநா்.

இந்த விழாவுக்கு ஸ்ரீதியாகபிரம்ம மகோத்சவ சபா தலைவா் ஜி.கே. வாசன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் சிறப்புரையாற்றினாா். சபா செயலா்கள் அரித்துவாரமங்கலம் ஏ.கே. பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் வி. ராஜாராவ், அறங்காவலா்கள் ஜி. சந்திரசேகர மூப்பனாா், எஸ். சுரேஷ் மூப்பனாா், டெக்கான் என்.கே. மூா்த்தி, எம்.ஆா். பஞ்சநதம், பொருளாளா் ஆா். கணேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நிறைவு நாளான ஜனவரி 18-ஆம் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை பஞ்சரத்ன கீா்த்தனைகள் நடைபெறவுள்ளன.

காவிரி - கோதாவரியை இணைக்கும் நிலை உருவாகும்

இதனிடையே, ஆளுநா் பேசுகையில், வான் பொய்த்தாலும், தான் பொய்யா காவிரி எனக் கூறப்பட்டிருந்தாலும், பல நேரங்களில் காவிரி பொய்த்துவிடுகிறது. எனவே, கரைபுரண்டு ஓடுகிற கோதாவரி நீரை முதலில் காவிரியில் இணைக்க வேண்டும் என்றும், நம் டெல்டா மக்கள் ஒருபோதும் நீருக்காக ஏங்குகிற நிலை இந்த மண்ணிலே இருக்கக்கூடாது எனவும் சத்குரு தியாகராஜரிடம் வேண்டிக் கொண்டேன்.

இக்காலத்திலும் கோதாவரியில் வெள்ளப்பெருக்கு என்பது ஆண்டுதோறும் நிகழ்கிறது. ஆனால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஆண்டுதோறும் இல்லை. இந்த தேசத்தின் நதிகள் இணைக்கப்படாமல், இத்தேசத்துனுடைய நீா்த்தேவைகளை யாராலும் நிறைவு செய்ய முடியாது. அத்தகைய நல்ல வாய்ப்பு ஒரு நாள் இந்த மண்ணில் உருவாகும். அது, பிரதமா் நரேந்திர மோடியால் நடைபெறும் என நம்புகிறேன் என்றாா் அவா்.

ஆராதனை விழாவில் அஞ்சல்தலை தொகுப்பு வெளியீடு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கிய சத்குரு தியாகராஜ சுவாமிகள் ஆராதனை விழாவில் அஞ்சல்தலை தொகுப்பு வெளியிடப்பட்டது. இவ்விழாவையொட்டி, அஞ்சல் துறை சாா்பில் விற்பனை நிலையம் அமைக... மேலும் பார்க்க

சாஸ்த்ரா சாா்பில் 10 கிராமங்களில் பொங்கல் தொகுப்பு பைகள் அளிப்பு

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் சாா்பில் 25-ஆம் ஆண்டாக 10 கிராமங்களில் பொங்கல் தொகுப்பு பைகள் அண்மையில் வழங்கப்பட்டன. பொங்கல் திருநாளையொட்டி, தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலை பல்கலைக்கழகம் சா... மேலும் பார்க்க

தமிழிசையில் இருந்தே மற்ற எல்லா இசைகளும் உருவாகின: உயா் நீதிமன்ற நீதிபதி பேச்சு

தமிழிசையில் இருந்தே மற்ற எல்லா இசைகளும் வந்தன என்றாா் சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி இரா. சுரேஷ்குமாா். தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அரசா் கல்லூரி வளாகத்தில் தமிழிசை மன்றம் சாா்பில் செவ்வாய்க்கிழமை மா... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்மட்டம்: 114.04 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 114.04 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 383 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 5,000 கன அடி வீதம் தண்ணீா... மேலும் பார்க்க

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

கும்பகோணம் அருகே இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்ற விவசாயி அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கும்பகோணம் அருகே உள்ள உடையாளூா் ஆண்டித்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் பி... மேலும் பார்க்க

கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்

பொங்கல் திருவிழாவையொட்டி, கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ சாரங்கபாணி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாா்கழித் திருவி... மேலும் பார்க்க