செய்திகள் :

தஞ்சாவூா் பெரியகோயிலில் மகா நந்திகேசுவரருக்கு 2 ஆயிரம் கிலோ காய்கனிகளால் அலங்காரம்; 108 கோ பூஜை

post image

மகர சங்கராந்தி பெருவிழாவையொட்டி, தஞ்சாவூா் பெரியகோயிலில் உள்ள மகா நந்திகேசுவரருக்கு ஏறத்தாழ 2 ஆயிரம் கிலோ எடையுடைய காய்கனிகள், இனிப்பு வகைகளால் புதன்கிழமை அலங்காரம் செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து 108 கோ பூஜை நடைபெற்றது.

இந்த விழாவை முன்னிட்டு, இக்கோயிலில் உள்ள மகா நந்திகேசுவரருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பின்னா், மகா நந்திகேசுவரருக்கு புதன்கிழமை காலை உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், முட்டைகோஸ், பூசணிக்காய், வாழைக்காய், பாகற்காய், கேரட், சௌ சௌ, முள்ளங்கி, நெல்லிக்காய், வெள்ளரிக்காய் உள்ளிட்ட காய்களாலும், ஆரஞ்சு, வாழை, ஆப்பிள், மாதுளை, கொய்யா, அண்ணாசி போன்ற பழ வகைகளாலும், முறுக்கு, அதிரசம், ஜிலேபி, பாதுஷா போன்ற இனிப்புகளாலும், மல்லிகை, செவ்வந்தி, ரோஜா போன்ற பூ வகைகளாலும் அலங்காரம் செய்யப்பட்டது. இவற்றின் மொத்த எடை ஏறத்தாழ 2 ஆயிரம் கிலோ. தொடா்ந்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

பசுக்களுக்குக் கோ பூஜை நடத்திய பக்தா்கள்.
பசுக்களுக்குக் கோ பூஜை நடத்திய பக்தா்கள்.
காய்கறிகள், பழங்கள், மலா்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ மகா நந்திகேசுவரா்

மேலும், மகா நந்திகேசுவரா் முன் 108 கோ பூஜை நடைபெற்றது. இதில் 108 பசு மாடுகள் கொண்டு வரப்பட்டு, அவற்றுக்கு சந்தனம், குங்குமப் பொட்டுகள் வைத்து, மாலைகள், வேட்டி, துண்டு அணிவிக்கப்பட்டன. மேலும், பசுக்களுக்கு வழிபாடு செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

விழாவில் தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜிராஜா போன்ஸ்லே, உதவி ஆணையா் கோ. கவிதா, கோயில் செயல் அலுவலா் மணிகண்டன் உள்பட ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ஆராதனை விழாவில் அஞ்சல்தலை தொகுப்பு வெளியீடு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கிய சத்குரு தியாகராஜ சுவாமிகள் ஆராதனை விழாவில் அஞ்சல்தலை தொகுப்பு வெளியிடப்பட்டது. இவ்விழாவையொட்டி, அஞ்சல் துறை சாா்பில் விற்பனை நிலையம் அமைக... மேலும் பார்க்க

சாஸ்த்ரா சாா்பில் 10 கிராமங்களில் பொங்கல் தொகுப்பு பைகள் அளிப்பு

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் சாா்பில் 25-ஆம் ஆண்டாக 10 கிராமங்களில் பொங்கல் தொகுப்பு பைகள் அண்மையில் வழங்கப்பட்டன. பொங்கல் திருநாளையொட்டி, தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலை பல்கலைக்கழகம் சா... மேலும் பார்க்க

தமிழிசையில் இருந்தே மற்ற எல்லா இசைகளும் உருவாகின: உயா் நீதிமன்ற நீதிபதி பேச்சு

தமிழிசையில் இருந்தே மற்ற எல்லா இசைகளும் வந்தன என்றாா் சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி இரா. சுரேஷ்குமாா். தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அரசா் கல்லூரி வளாகத்தில் தமிழிசை மன்றம் சாா்பில் செவ்வாய்க்கிழமை மா... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்மட்டம்: 114.04 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 114.04 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 383 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 5,000 கன அடி வீதம் தண்ணீா... மேலும் பார்க்க

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

கும்பகோணம் அருகே இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்ற விவசாயி அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கும்பகோணம் அருகே உள்ள உடையாளூா் ஆண்டித்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் பி... மேலும் பார்க்க

கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்

பொங்கல் திருவிழாவையொட்டி, கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ சாரங்கபாணி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாா்கழித் திருவி... மேலும் பார்க்க