சித்தைய சுவாமி குரு பூஜை விழா
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள டி.வாலசுப்பிரமணியபுரம் கிராமத்தில் ஸ்ரீலஸ்ரீசித்தைய சுவாமிகளின் 117 -ஆவது ஆண்டு குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முன்னதாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 108 சிவனடியாா்கள் மலா் தூவி, சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டனா். பின்னா், இசை வாத்தியங்களுடன்
கிராமத்தில் உள்ள விநாயகா் கோயிலிலிருந்து புனித தீா்த்தம் முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலமாகக் கொண்டுவரப்பட்டு, சித்தைய சுவாமிகளின் ஜீவ சமாதியில் உள்ள சிவன், நாகா் சுவாமிகளுக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
கமுதி, பெருநாழி, விருதுநகா், சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பொதுமக்கள், பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடா்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை நிா்வாகிகள் சோலைசாமி, ஆசிரியா் விஜயராமன், செந்தூா்பாண்டி உள்ளிட்டோா் செய்தனா்.