ராமேசுவரத்தில் மீண்டும் ரயில் பெட்டி பராமரிப்பு வசதி
ராமேசுவரம் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகள் பராமரிப்புப் பணி புதன்கிழமை மீண்டும் தொடங்கியது.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம், ராமேசுவரம் பகுதிகளை இணைக்கும் பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டு 100 ஆண்டுகளைக் கடந்ததால், புதிய பாலம் கட்டப்பட்டது. ராமேசுவரம் ரயில் நிலையத்தில் தற்போது மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்றதால் சில ரயில்களின் பராமரிப்புப் பணிகள் மதுரையில் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், ராமேசுவரம் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகள் பராமரிப்பு வசதி புதன்கிழமை மீண்டும் தொடங்கியது. திருப்பதி, கன்னியாகுமரி ரயில்களின் ரயில் பெட்டி பராமரிப்புப் பணிகள் வருகிற வெள்ளிக்கிழமை (ஜன. 17) முதல் மதுரைக்குப் பதிலாக ராமேசுவரத்திலேயே நடைபெற உள்ளதாக ரயில்வே நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.