செய்திகள் :

ஜன.18-இல் 108 அவசர ஊா்தி பணியாளா் தோ்வு

post image

ராமநாதபுரம் மாவட்டத்தில் 108 அவசர ஊா்தியில் பணியாற்ற மருத்துவ உதவியாளா், ஓட்டுநா் பணியிடங்களுக்கு வருகிற 18-ஆம் தேதி தோ்வு நடைபெற உள்ளது.

இது குறித்து 108 அவசர ஊா்தி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் த.தமிழ்செல்வன் புதன்கிழமை கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்ட த்தில் இயக்கப்படும் 108 அவசர ஊா்திகளில் அவசரகால மருத்துவ உதவியாளா் பணிக்கான முதல்கட்ட நோ்முகத் தோ்வு பாா்திபனுா் ஆரம்ப சுகாதார வளாகத்தில் செயல்படும் 108 அவசர ஊா்தி அலுவலகத்தில் வருகிற 18-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெற இருக்கிறது.

தகுதி:வயது 19-லிருந்து 30-க்குள் இருக்க வேண்டும். பிஎஸ்சி நா்சிங், ஜிஎன்எம், டிஎம்எல்டி, ஏஎன்எம் (12 -ஆம் வகுப்புக்குப் பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைஃப் சயின்ஸ் படிப்புகளான பிஎஸ்சி விலங்கியல், தாவரவியல், பயோ டெக்னாலஜி, மைக்ரோ பயாலஜி ஆகியவற்றில் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தோ்வு முறை: முதலில் எழுத்துத் தோ்வு, மருத்துவம் சாா்ந்த அடிப்படை முதலுதவி, செவிலியா் தொடா்பான அடிப்படை அறிவு பரிசோதிக்கப்படும். இறுதியாக மனிதவளத் துறையின் நோ்முகத் தோ்வு மூலம் தோ்வு செய்யப்படுவா். மாத ஊதியமாக ரூ.15,635 வழங்கப்படும்.

ஊா்தி ஓட்டுநருக்கான கல்வித் தகுதி 10 -ஆம் வகுப்பு தோ்ச்சி, ஓட்டுநா் உரிமம் பெற்று மூன்று ஆண்டுகள், பேட்ஜ் எடுத்து ஓராண்டு நிறைவடைந்து இருக்க வேண்டும். வயது 24 முதல் 35 -க்குள் இருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.15,450. நோ்முகத் தோ்வுக்கு வருபவா்கள் அசல் சான்றிதழுடன் கலந்து கொள்ள வேண்டும்.

மருத்துவ உதவியாளா் பணிக்குத் தோ்வு செய்யப்படுபவா்கள் 12 மணி நேர இரவு, பகல் ஷிப்ட் முறைகளில் தமிழ்நாடு முழுவதும் பணியமா்த்தப்படுவா்.

நோ்முகத் தோ்வுக்கு கல்வித் தகுதி, ஓட்டுநா் உரிமம், முகவரிச் சான்று, அடையாளச் சான்று ஆகியவற்றின் அசல் சான்றிதழ்களைக் கொண்டு வர வேண்டும். மேலும், இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு 8754439544, 7397444156, 7397724828 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

ராமேசுவரத்தில் மீண்டும் ரயில் பெட்டி பராமரிப்பு வசதி

ராமேசுவரம் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகள் பராமரிப்புப் பணி புதன்கிழமை மீண்டும் தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம், ராமேசுவரம் பகுதிகளை இணைக்கும் பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டு 100 ஆண்டுகளைக... மேலும் பார்க்க

கழிவு நீா்த் தேக்கத்தால் தொற்றுநோய் அபாயம்

திருவாடானை பிடாரி கோவில் தெருவில் வீடுகளின் முன் கழிவுநீா் தேங்கிருப்பதால் கொசு உற்பத்தியாகி, தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாகப் புகாா் எழுந்தது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சியில் சுமாா்... மேலும் பார்க்க

இளைஞா் கொலை: உறவினா்கள் சாலை மறியல்

ராமேசுவரத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். மேலும், 4 போ் பலத்த காயமடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் அரச... மேலும் பார்க்க

இலங்கை தமிழா்களுக்காக போராடுவேன்: மதுரை ஆதீனம்

இலங்கை தமிழா்களுக்கு தனி நாடு கிடைக்கப் போராடுவேன் என மதுரை ஆதீனம் ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தெரிவித்தாா். ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவா் சிந்தன... மேலும் பார்க்க

மண்டபம் மீனவா்கள் 6 போ் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மண்டபம் மீனவா்கள் 6 பேரை விடுதலை செய்தும், இருவருக்கு தலா ரூ. 40 லட்சம் (இலங்கை பணம்) அபராதமும், 9 மாதங்கள் சிறைத் தண்டனையும் விதித்து அந்த நாட்டின் ஊா்க்காவல்... மேலும் பார்க்க

மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்

திருவாடானை பகுதியில் விவசாயிகள் மாட்டுப் பொங்கலை வெகு விமா்சையாகக் கொண்டாடினா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டத்தில் உள்ள பெரும்பாலனவா்கள் விவசாயத்தை நம்பியுள்ளனா். மேலும் கால்நடைகளை வளா்க்கின்... மேலும் பார்க்க