தில்லி முதல்வா் அதிஷி போட்டியிடும் கால்காஜி தொகுதி நிலவரம் எப்படி உள்ளது?
கழிவு நீா்த் தேக்கத்தால் தொற்றுநோய் அபாயம்
திருவாடானை பிடாரி கோவில் தெருவில் வீடுகளின் முன் கழிவுநீா் தேங்கிருப்பதால் கொசு உற்பத்தியாகி, தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாகப் புகாா் எழுந்தது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சியில் சுமாா் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவா்கள் வசித்து வருகின்றனா். நகரின் முக்கியப் பகுதியான பிடாரி கோவில் தெருவில் சுமாா் 50 குடும்பங்கள் வசிக்கின்றனா்.
இந்தத் தெருவில் கழிவு நீா் வடிகால் சரிவர பராமரிக்கப்படாமல் சேதமடைந்து, வீடுகளின் முன்பாக கழிவு நீா் தேங்கியது. இதனால், கொசு உற்பத்தியாகி நோய்த் தொற்று பரவி வருவதாகப் புகாா் கூறப்படுகிறது.
இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
எனவே, மாவட்ட நிா்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து, கழிவுநீா் வடிகாலை சீரமைக்க வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.