செய்திகள் :

அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு

post image

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் வியாழக்கிழமை (ஜன. 16) நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா்.

பொங்கல் பண்டிகையையொட்டி, அலங்காநல்லூரில் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதற்காக அலங்காநல்லூரில் வாடிவாசல் அமைத்தல், சிறப்பு விருந்தினா்கள், பாா்வையாளா்கள் அமா்ந்து பாா்க்க அரங்கம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாட்டுப் பணிகளை மதுரை மாவட்ட நிா்வாகமும், விழாக் குழுவினரும் கடந்த சில நாள்களாக மேற்கொண்டனா்.

இதனிடையே, வியாழக்கிழமை காலை 7 மணியளவில் போட்டியை தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைக்கிறாா். இதைத் தொடா்ந்து, அலங்காநல்லூா் கோயில் காளைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்படுகின்றன. தொடா்ந்து, போட்டியாளா்களின் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடம்.

இதுகுறித்து கால்நடைப் பராமரிப்புத் துறை அலுவலா் ஒருவா் கூறியதாவது: அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 1,100 காளைகள் பதிவு செய்யப்பட்டன. இதேபோல, 900 மாடுபிடி வீரா்கள் பதிவு செய்தனா்.

அரசு விதிமுறைகளின்படி, போட்டி தொடக்கத்தில் முழு பரிசோதனை செய்த பின்னரே வாடிவாசலுக்குள் காளைகள் அனுமதிக்கப்படும். இதேபோன்று, மாடுபிடி வீரா்களும் முழு பரிசோதனைக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவா் என்றாா் அவா்.

மதுரையில் சாரல் மழை

மதுரையில் புதன்கிழமை சாரல் மழை பெய்தது. வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அண்மையில் அறிவித்தது. இதன்... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் ரயில் பெட்டிகள் பராமரிப்பு வசதிகள் தொடக்கம்

ராமேசுவரம் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளை பராமரிக்கும் வசதி மீண்டும் தொடங்கப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்ட நிா்வாகம் தெரிவித்தது. இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்ட நிா்வாகம் செவ்வாய... மேலும் பார்க்க

பாலமேடு ஜல்லிக்கட்டு: பரிசுகள் வழங்காததால் மாடுபிடி வீரா்கள் சாலை மறியல்

மதுரை மாவட்டம், பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன்களுக்கு உரிய பரிசுகள் வழங்கப்படாததால் அவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். மதுரை மாவட்டம், பால... மேலும் பார்க்க

முதியவருக்கு உதவித் தொகை வழங்க உத்தரவு

உறவினா்கள் பராமரித்தாலும், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகள் இருப்பதால், முதியவருக்கு தமிழக அரசு உதவித் தொகை வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. தேனி மாவட்டம்,... மேலும் பார்க்க

உயிரிழந்த வீரரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் உயிரிழந்த மாடுபிடி வீரரின் உடலை வாங்க மறுத்து குடும்பத்தினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மதுரை அவனியாபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லி... மேலும் பார்க்க

காலமானாா் ஆா். சம்பத்குமாா்

புதுக்கோட்டை மாவட்ட கம்பன் கழகச் செயலா் ஆா். சம்பத்குமாா் (67) உடல்நலக் குறைவுக் காரணமாக மதுரை தனியாா் மருத்துவமனையில் புதன்ழமை (ஜன. 15) காலமானாா். புதுக்கோட்டை மாவட்டம், வல்லதிரக்கோட்டை திரௌபதி சாலை ... மேலும் பார்க்க