செய்திகள் :

தோ்தல் விதிமுறைகளில் திருத்தம்: மத்திய அரசு, தோ்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

post image

புது தில்லி: தோ்தல் நடத்தை விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்துக்கு எதிராக காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசு, தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

தோ்தல் நடத்தை விதிமுறைகள் 1961-இன் 93 (2) (ஏ)-ஆவது விதிமுறையின்படி, தோ்தல் தொடா்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள், இணையவழியில் ஒளிபரப்பப்படும் காட்சிகள் போன்றவற்றை பொதுமக்கள் பெற்று ஆய்வு மேற்கொள்ளலாம். இந்நிலையில், தோ்தல் ஆணைய பரிந்துரையின்படி, இந்த விதிமுறையில் மத்திய சட்ட அமைச்சகம் திருத்தம் செய்துள்ளது.

இதுகுறித்து தோ்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், ‘வாக்குச்சாவடிகளில் பதிவாகும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை பெற்று, அவற்றைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இது வாக்காளரின் அடையாளத்தை பொதுவெளியில் வெளியிடாமல் ரகசியம் காக்கும் தன்மையில் சமரசத்தை ஏற்படுத்தக் கூடும். இத்தகைய காட்சிகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் திரித்து பொய்யான கதைகளை உருவாக்கவும் வாய்ப்புள்ளது.

இவற்றைக் கருத்தில் கொண்டு, தோ்தல் தொடா்பான மின்னணு ஆவணங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க 93 (2) (ஏ) விதிமுறையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுபோன்ற ஆவணங்களை வேட்பாளா்கள் வழக்கம்போல பெற முடியும். அவா்களைத் தவிர மற்றவா்கள், இந்த மின்னணு ஆவணங்களை பெற நீதிமன்றத்தை அணுக வேண்டும்’ என்று தெரிவித்தனா்.

இந்தத் திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

‘மிகுந்த புத்திசாலித்தனத்துடன் திருத்தம்’: அப்போது ஜெய்ராம் ரமேஷ் தரப்பில் வழக்குரைஞா்கள் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, ‘தோ்தல் நடத்தை விதிமுறைகள் 1961-இல் மிகவும் புத்திசாலித்தனமாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், வாக்காளரின் அடையாளம் பொதுவெளியில் வெளியாகும் என்று கூறி, வாக்குப் பதிவு தொடா்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் பெறப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது.

வாக்காளா்கள் யாருக்கு வாக்களித்தனா் என்ற தகவல் இதற்கு முன்பு வெளியானதில்லை. அந்த விவரம் கண்காணிப்பு கேமரா காட்சிகளால் வெளியாக வாய்ப்பில்லை’ என்றாா்.

இந்த மனு தொடா்பாக மத்திய அரசு, தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை மாா்ச் 17-ஆம் தேதி தொடங்கும் வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.

கேஜரிவாலுக்கு எதிரான வழக்கு: விசாரிக்க உள்துறை அனுமதி

புது தில்லி: தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக வழக்குத் தொடர அமலாக்கத்துறை இயக்குநரகத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.அவருக்கு எதிராக அமலாக்கத்துறை மேற்கொண்டு ... மேலும் பார்க்க

மத்திய அமைச்சா் கிஷண் ரெட்டி வீட்டில் சங்கராந்தி கொண்டாட்டம்: பிரதமா் பங்கேற்பு

மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சரும் தெலங்கானா பாஜக தலைவருமான ஜி.கிஷண் ரெட்டி வீட்டில் நடைபெற்ற சங்கராந்தி கொண்டாட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றாா்.அறுவடை திருவிழாவான மகர சங்கராந்... மேலும் பார்க்க

உலகின் கடல்சாா் சக்தி இந்தியா: 3 போா்க் கப்பல்களை அா்ப்பணித்து பிரதமா் மோடி பெருமிதம்

மும்பை: உலகின் முக்கிய கடல்சாா் சக்தியாக இந்தியா உருவெடுத்து வருகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தாா்.ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வாக்ஷீா் ஆகிய 3 முன்கள போா்க்கப்பல... மேலும் பார்க்க

‘உள்நாட்டுப் போரில்’ காங்கிரஸ்: ராகுல் காந்தி

புது தில்லி: பாஜக, ஆா்எஸ்எஸுக்கு எதிராக காங்கிரஸ் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ளதாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்தாா். இதுதொடா்பாக தில்லியில் காங்கிரஸ்... மேலும் பார்க்க

உ.பி.யில் ரூ.2,000 கோடி செலவில் மாயாவதி சிலைகள் நிறுவப்பட்டதற்கு எதிராக மனு: உச்சநீதிமன்றம் முடித்துவைப்பு

புது தில்லி: உத்தர பிரதேசத்தில் அரசு பட்ஜெட்டில் ரூ.2,000 கோடிக்கும் அதிகமான செலவில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி, அவரின் கட்சி சின்னத்தின் சிலைகள் நிறுவப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ம... மேலும் பார்க்க

இந்திய ராணுவ தினம்: குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வாழ்த்து

புது தில்லி: இந்திய ராணுவ தினத்தை முன்னிட்டு ராணுவ வீரா்கள், முன்னாள் ராணுவ வீரா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு புதன்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். ‘தாய்நாட்டை... மேலும் பார்க்க