செய்திகள் :

தொடரும் மீனவர் சிறை பிடிப்பு... ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை 2 படகுகளுடன் கைதுசெய்த இலங்கை கடற்படை!

post image

பாக் நீரிணை பகுதியில் மீன்பிடிக்க செல்லும் ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பது பல ஆண்டு காலமாக தொடர்கிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 569 மீனவர்கள் கைதுசெய்யப்பட்ட நிலையில் அவர்களுக்குச் சொந்தமான 73 படகுகளும் இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் இந்தியா வந்த இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு மனிதாபிமான முறையில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர் வந்து சென்ற அடுத்த வாரத்திலேயே 17 மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்து சென்றது.

இதனை தொடர்ந்து இந்த ஆண்டு துவக்கத்தில் நாகை மாவட்ட மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையினரால் சிறை பிடித்து செல்லப்பட்டனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக முதல்வரும் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனிடையே கடந்த 3 தினங்களுக்கு முன் தமிழகத்திற்கு வந்த மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன், ''தமிழக மீனவர்கள் சிறைபிடித்து செல்லப்படுவது குறித்து வெளியுறவுத்துறை மற்றும் மத்திய மீன்வளத்துறை செயலாளர்கள் இலங்கை உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்'' எனத் தெரிவித்திருந்தார்.

இலங்கையில் சேதமாகி கிடக்கும் தமிழக படகுகள்

ஆனால் அவரது கருத்துக்கு எதிராக இலங்கை கடற்படையினர் இன்றும் 8 மீனவர்களை சிறை பிடித்து சென்றுள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 169 விசைப்படகுகள் மீன்பிடிக்க சென்றன. இதில் முகேஷ்குமார் மற்றும் மரிய ரெட்ரிக்சன் ஆகியோருக்கு சொந்தமான 2 விசைப்படகுகளில் சென்ற 8 மீனவர்கள் இன்று அதிகாலை பாரம்பர்ய பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், களஞ்சியம், முனீஸ்வரன், கார்மேகம், கண்ணன், பிரிஸ்மன், மரிய ஜான் ரெமோரா, பிரியன், சவேரியார் அடிமை ஆகிய 8 மீனவர்களை படகுகளுடன் சிறை பிடித்து சென்றனர். நாளை மறுதினம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் சிறை பிடித்து செல்லப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் துறைமுகத்தில் படகுகள்

பேனா தினம்: சட்டையில் எழுதி கொண்டாடிய மாணவிகள்; சட்டையை கழற்றி, வீட்டுக்கு அனுப்பிய பள்ளி முதல்வர்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாட் மாவட்டத்தில் இருக்கும் திக்வாதி என்ற இடத்தில் இருக்கும் பள்ளியில் மாணவர்கள் பேனா தினத்தை கொண்டாடினர். இதற்கு பள்ளி முதல்வர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் அவர... மேலும் பார்க்க

தேனி: காவல் நிலையத்தில் கொள்ளை முயற்சி... பரபரத்த போலீஸ்; இருவர் கைது! - நடந்தது என்ன?

தேனி பெரியகுளம் ரோட்டில் ஈஸ்வர் நகரில் போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு காவல் நிலையம் உள்ளது. நேற்று நள்ளிரவு காவல் நிலையத்தில் இருந்து பலத்த சத்தம் கேட்டிருக்கிறது. அருகில் இருந்தவர்கள் போலீஸாருக்கு தக... மேலும் பார்க்க

'6 மாதங்களாக ஃபிரிட்ஜில் இளம்பெண் சடலம்' - லிவ் இன் பார்ட்னரை கொன்ற நபர்!

மத்திய பிரதேசம் திவாஸ் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் படிதார். இவரது வீட்டில் கடுமையான துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இதனையடுத்து போலீஸார் செய்த சோதனையில் வீட்... மேலும் பார்க்க

மதுரை: கோயிலுக்கு வந்த சிறுமி பாலியல் வதை செய்யப்பட்ட கொடூரம்; போலீஸ் எஸ்.எஸ்.ஐ கைது - என்ன நடந்தது?

மதுரை மாவட்டத்தில் கோயிலுக்கு சென்ற 14 வயது சிறுமியை போலீஸ் எஸ்.எஸ்.ஐ ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்து கைதாகியுள்ள சம்பவம் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.போக்சோ வழக்குசென்னை அண்ணா பல்க... மேலும் பார்க்க

பாஜக Ex.MLA வீட்டில் IT ரெய்டு; முதலைகளைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி... வனத்துறை வழக்குப்பதிவு!

வருமான வரித்துறையினர் சோதனைக்கு சென்ற இடத்தில் முதலைகள் மற்றும் பிற ஊர்வனவற்றை செல்லபிராணியாக வளர்ப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.மத்திய பிரதேசம் மாநிலம், சாகர் மாவட்டத்தில் வசிக்கிறார் முன்னாள் ... மேலும் பார்க்க

`5 ஆண்டுகளாக லிவ்-இன் ரிலேஷன்ஷிப்' -8 மாதங்கள் ஃபிரிட்ஜில் இருந்த பெண்ணின் உடல்... பகீர் பின்னணி

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் தம்பதிகள் இடையே தகராறு ஏற்படும் போது அது வன்முறையில் முடிந்து விடுகிறது. ஏற்கெனவே இரண்டு ஆண்டுக்கு முன்பு டெல்லியில் அது போன்று லிவ் இன் முறையில் வாழ்ந்த ஸ்ரத... மேலும் பார்க்க