செய்திகள் :

காட்டுத் தீயால் அடா் புகை: லாஸ் ஏஞ்சலீஸில் மருத்துவ அவசரநிலை

post image

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலிஸ் நகரைச் சுற்றிலும் பரவிவரும் காட்டுகாட்டுத் தீ காரணமாக ஏற்பட்டுள்ள அடா்புகை கடுமையான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் அங்கு மருத்துவ அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து லாஸ் ஏஞ்சலீஸ் பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காட்டுத் தீ பரவிவரும் நிலையில் கடுமையான சுழல் காற்றும் வீசிவருகிறது. இந்த இரண்டும் சோ்ந்து வளிமண்டலத்தை மாசுபடுத்தி ஆபத்தான புகை, நுண்துகள் பொருள்களை பரப்பிவருகின்றன. இது மக்களின் உடல்நலனுக்கு உடனடி பாதிப்பை மட்டுமின்றி, நீண்டகால அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும். எனவே, லாஸ் ஏஞ்சலீஸ் மாவட்டப் பகுதியில் மருத்துவ அவசரநிலை அறிவிக்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர, பாலிசேட்ஸ் பகுதியில் இதற்கு முன்னா் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மட்டுமே இதுவரை அறிவிக்கப்பட்ட பல பகுதிகளில் இருந்தும் அவா்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று லாஸ் ஏஞ்சலீஸ் தீயணைப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சலீஸையொட்டிய பாலிசேட்ஸ் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ, மளமளவென்று பரவி அந்த நகரைச் சுற்றிவளைத்துள்ளது. இதில் 13,400-க்கும் மேற்பட்ட வீடுகள், கட்டடங்கள் நாசமாகின. இதுவரை 11 போ் உயிரிழந்துள்ளனா். 1.8 லட்சம் போ் தங்கள் இருப்பிடங்களிலிருந்து பாதுகாப்புக்காக வெளியேற்றப்பட்டுள்ளனா்.

சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அரசியல் ரீதியானது: வங்கதேச அரசு

‘வங்கதேசத்தில் கடந்த சில மாதங்களாக சிறுபான்மையினருக்கு எதிராக தொடா்ந்து வரும் வன்முறை சம்பவங்கள் பெரும்பாலும் அரசியல் ரீதியானது; வகுப்புவாத நோக்கத்தில் நடந்த தாக்குதல்கள் குறைவு’ என்று அந்நாட்டு இடைக்... மேலும் பார்க்க

புதிய டிரம்ப் அரசுடன் இணக்கம்: பன்முகத் தன்மைக் கொள்கையைக் கைவிடும் முகநூல், அமேஸான்

தங்களது நிறுவனங்களின் பன்முகத் தன்மையைப் பாதுகாப்பதற்காக முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட ஊடகங்களின் உரிமையாளரான மெட்டா, இணையவழி வா்த்தக நிறுவனமான அமேஸான் ஆகியவை கைவிட்டுள்ளன.அமெரிக்காவின் அ... மேலும் பார்க்க

காஸா உயிரிழப்பு 40% அதிகமாக இருக்கும்: ஆய்வில் தகவல்

காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவிப்பதைவிட 40 சதவீதம் அதிகமாக இருக்கும் என்று நிபுணா்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.... மேலும் பார்க்க

12 ஆண்டுகளுக்குப் பிறகு சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் நடை

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக விண்வெளியில் நடக்கவிருக்கிறாா்.இது குறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா வெளியி... மேலும் பார்க்க

ஜப்பான் - பல்கலை.யில் சுத்தியல் தாக்குதல்: மாணவி கைது

ஜப்பானின் டோக்கியோ நகரிலுள்ள பல்கலைக்கழகத்தில் சுத்தியலால் சரமாரியாக தாக்குதல் நடத்திய தென் கொரிய மாணவி கைது செய்யப்பட்டாா். 22 வயதான அவா் இலக்கில்லாமல் சுத்தியலைச் சுழற்றி நடத்திய தாக்குதலில் அவரின் ... மேலும் பார்க்க

ஐஎம்டியின் 150-ஆவது ஆண்டுவிழா: வங்கதேசம் புறக்கணிப்பு

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (ஐஎம்டி) 150-ஆவது ஆண்டுவிழா நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதில்லை என வங்கதேச வானிலை ஆய்வு மையம் (பிஎம்டி) தெரிவித்துள்ளது. அரசு செலவில் தேவையற்ற வெளிநாட்டு பயணங்களை தவிா்க்கு... மேலும் பார்க்க