நிகும்பலா ஹோமம்: 48 நாள்களுக்குள் உங்கள் எல்லா பிரச்னைகளையும் தீர்த்துவிடும் மகாகாளி குங்குமம்
2025 ஜனவரி 12 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி முதல் மகா நிகும்பலா ஹோமம் நடைபெற உள்ளது. மேலவல்லம் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் மகா நிகும்பலா ஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தால் தீமைகள் யாவும் விலகி நன்மைகள் சூழும் என்பது நம்பிக்கை.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
நரசிம்மரின் சீற்றம் தணிக்க ஈசன் சரபராக தோன்றியபோது, அவருடைய பிரமாண்ட இரு இறக்கைகளாக பிரத்யங்கிராதேவியும், சூலினி துர்கையும் தோன்றினர். மேலும் இவளை பைரவ பத்தினியாக சைவர்கள் போற்றுவர். சிம்மக்கொற்றவை என்று ஆதியிலிருந்தேப் போற்றப்பட்டவள் இவள். ஓங்காரம் எனும் பிரணவ ஸ்வரூபிணியாக விஸ்வரூபம் கொண்டவள். எதிரிகளை அடக்குவதில் இவளே சிறந்தவள் என்கின்றன புராணங்கள்.
முக்கண்கள் கொண்ட சிவந்த சிம்ம முகம், சிவந்த முட்டை விழிகள், அலை பாயும் விரி கூந்தல், பதினாறு திருக்கரங்களுடன் ராஜசிம்ம வாகனத்தில் எழுந்தருளுவாள். சூலம், பாசம், டமருகம், முண்டம், சர்ப்பம், குங்குமக் கிண்ணம் போன்றவை ஏந்தியவள். ஆங்கிரஸர், பிரத்யங்கிரஸ் உள்ளிட்ட பல ரிஷிகள் இந்த தேவிக்கு உரிய மூல மந்திரத்தைக் கண்டறிந்து போற்றியுள்ளனர்.
ஏவல், பில்லி, சூன்யம், செய்வினை போன்ற எதிர்மறை எண்ணங்களைப் பொசுக்கும் பிரத்யங்கரா தேவியை ஞாயிறு மற்றும் அமாவாசை தினங்களில் நிகும்பலா ஹோமம் செய்து வழிபட்டால், தீமைகள் நீங்கும். சத்ரு பயம், மனக்கலக்கங்கள் அகலும். எடுத்த காரியங்களில் தடைகள் நீங்கி வெற்றி சர்வ நிச்சயமாகும்.
அதர்வண வேதத்தில் மகாகாளியாக வழிபடப்பட்ட இந்த அன்னையின் நீதியும் காவலும் நிச்சயம் உங்களைக் காக்கும். இத்தகையை பெருமைகள் கொண்ட தேவியை உங்கள் வீடும் சுற்றமும் உறவும் நட்பும் நலமோடு வாழ ஆராதிக்க உள்ளோம்.
2025 ஜனவரி 12-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை மார்கழி ஆருத்ரா அபிஷேக நன்னாளில் மாலை 4.30 மணி முதல் நடைபெற உள்ளது. சிதம்பரத்திற்கும் சீர்காழிக்கும் இடையில் 12 கி.மீ. தொலைவில் கொள்ளிடம் அருகே உள்ள மேலவல்லம் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் மகா நிகும்பலா ஹோமம் நடைபெற உள்ளது. எதிரிகளை வீழ்த்தவும், நினைத்த காரியம் கைகூடி உயர் பொறுப்புகள் பெறவும், வாழ்வில் ஏறுமுகம் காண்பதற்கும் நிகும்பலா ஹோமம் உதவும் என்கின்றன புனித நூல்கள். திருமணத் தடைகள், குடும்பத்தில் தொடர்ந்து வரும் சிக்கல்கள், வியாபார தொழில் தேக்கங்கள், மாறி மாறி வரும் மன - உடல் உபாதைகள் யாவையும் நீங்க இந்த நிகும்பலா ஹோமம் உதவும்.
புராண காலம்தொட்டே புகழ்பெற்று விளங்கிய இந்த மேலவல்லம் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி ஆலயம் பின்னாளில் பழுதுபட்டு மறைந்துவிட, தற்போது இது கட்டப்பட்டு புகழ்பெற்று விளங்கி வருகிறது. இந்த ஹோமத்தால் இழந்தவைகளை மீட்பீர்கள். பதவி உயர்வு, எதிர்கால லட்சியங்களை அடைவீர்கள். செல்வவளம், கடன் பிரச்னை தீர்வு, வேலை-வெளிநாட்டு வாய்ப்புகள், வியாபார விருத்தி, தொழில் வளர்ச்சி, குழந்தைகள் நலம், ஆரோக்கிய வாழ்வு, தோஷ நிவர்த்தி என உங்களின் வேண்டுதல்கள் ஏதுவாக இருந்தாலும் நிச்சயம் இந்த வழிபட்டால் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
இந்த நிகும்பலா யாகத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அனுப்பப்படும் புனித குங்குமம் மகிமை வாய்ந்தது. இதைப் பெற்று உங்கள் பூஜையறையில் வைத்து, மகாகாளியை அல்லது பிரத்யங்கிரா தேவியை தியானித்து நம்பிக்கையோடு நெற்றியில் பூசி வரவேண்டும். இதனால் நிச்சயம் 48 நாள்களுக்குள் உங்கள் எல்லா பிரச்னைகளும் தீர்ந்துவிடும். செய்வினை, எதிரிகள் அச்சம், மரண பயம் உள்ளிட்ட எல்லா அச்சங்களும் நீங்கிவிடும்.
NIGUMBALA HOMAM QR CODE
குறிப்பு: உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விசேஷ ரட்சை, அட்சதை, மற்றும் குங்குமம் அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan