செய்திகள் :

வசூல் வேட்டையில் கேம் சேஞ்சர்: முதல்நாள் வசூல் விவரம்!

post image

நடிகர் ராம் சரண் நடிப்பில் வெளியான கேம் சேஞ்சர் படத்தின் முதல்நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் நேற்று (ஜனவரி 10 ) திரையரங்குகளில் வெளியானது.

இப்படத்தில் எஸ். ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

நேற்று வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அசத்தி வருகிறது.

முதல்நாளில் உலகம் முழுவதும் ரூ. 186 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக பாக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

நீண்ட நாள்கள் காத்திருப்புக்குப் பின்னர் வெளியாகும் ஜேம் சேஞ்சர் ரான் சரணுக்கு மிகப் வெற்றியை தருமென அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்தியன் -2 தோல்வியிலிருந்து ஷங்கர் தப்பித்துவிட்டாரா என்பது இன்னும் சில நாள்களில் தெரியவரும்.

இதிலும் வெற்றி கிடைக்கட்டும்... அஜித்தை வாழ்த்திய சிவகார்த்திகேயன்!

கார் பந்தயத்தில் கலந்துகொள்ளும் நடிகர் அஜித்திற்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்... மேலும் பார்க்க

விடாமுயற்சி வெளியீட்டுத் தேதி இதுதானாம்!

விடாமுயற்சி திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம... மேலும் பார்க்க

இன்றைய ராசி பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.11.01.2025 (சனிக்கிழமை)மேஷம்இன்று மனைவி, பிள்ளைகளாலும் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கு... மேலும் பார்க்க

பிரதிகா, தேஜல் அசத்தல்: அயா்லாந்தை வென்றது இந்தியா

அயா்லாந்து மகளிா் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில், இந்திய மகளிா் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.முதலில் அயா்லாந்து 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 238 ரன்கள் ... மேலும் பார்க்க

அரையிறுதியில் சாத்விக் / சிராக் இணை

மலேசியா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி இணை அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறியது.ஆடவா் இரட்டையா் காலிறுதியில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலி... மேலும் பார்க்க

இறுதியில் கோா்டா - அலியாசிமே பலப்பரீட்சை: மகளிரில் பெகுலா - கீஸ் மோதல்

அடிலெய்ட் இன்டா்நேஷனல் டென்னிஸ் போட்டியில், ஆடவா் இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் செபாஸ்டியன் கோா்டா - கனடாவின் ஃபெலிக்ஸ் ஆகா் அலியாசிமே பலப்பரீட்சை நடத்துகின்றனா்.முன்னதாக அரையிறுதியில், போட்டித்தரவரிச... மேலும் பார்க்க