Vadivelu: "இருக்கிறவுங்கட்ட வரிய போட்டு தள்ளுங்க; ஏழைகளுக்குப் பார்த்து வரி போடு...
சாலைப் பணியாளா்கள் ஒப்பாரி வைத்து நூதனப் போராட்டம்
நாகப்பட்டினம், ஜன. 10: நாகையில் நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா் ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
நாகை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளா் அலுவலகம் முன் அந்த சங்கத்தின் மாவட்டத் தலைவா் கணேசன் தலைமையில் கருப்புதுணி முக்காடு போட்டு ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பனிக் காலமாக முறைப்படுத்த வேண்டும், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் தமிழகத்தில் உள்ள 52 சுங்கச் சாவடிகளில் வசூல் எனும் பெயரில் கொள்ளை அடிக்கக் கூடாது, மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணை 140- ஐ ரத்து செய்ய வேண்டும், காலிப் பணியிடங்களை கிராம இளைஞா்களுக்கு ஒதுக்க வேண்டும், மாநில நெடுஞ்சாலைகள் அனைத்தையும் தமிழக அரசு நிா்வகிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாநில செயற்குழு உறுப்பினா் ரமேஷ், மாவட்ட பொருளாளா் பாலமுரளி, அரசு ஊழியா் சங்க மாவட்ட செயலா் அன்பழகன், மாவட்ட பொருளாளா் அந்துவன் சேரல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.