செய்திகள் :

மயிலாடுதுறை மாவட்டத்தில 175 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்க அனுமதி

post image

மயிாலடுதுறை மாவட்டத்தில் 175 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி.

செம்பனாா்கோவில் அருகே கிடாரங்கொண்டானில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சம்பா பருவத்துக்கான நெல் கொள்முதல் பணியை தொடக்கிவைத்து பேசியது: மாவட்டத்தில் நிகழாண்டு 175 நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது 68 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. நெல் வரத்துக்கு தகுந்தாற்போல படிப்படியாக கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். மாவட்டத்தில் 68,880 ஹெக்டேரில் நெல் சாகுபடி நடைபெற்றுள்ள நிலையில் 3,44,400 மெ.டன் நெல் உற்பத்தியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகம் மூலம் 2,50,000 மெ.டன் தற்போது கொள்முதல் செய்யப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. சன்னரக நெல் குவிண்டால் 1-க்கு 2,320, ஊக்கத்தொகை 130 என மொத்தம் ரூ. 2,450-க்கும், பொதுரக நெல் குவிண்டால்1-க்கு ரூ.2,300, ஊக்கத்தொகை ரூ.105 என மொத்தம் ரூ.2,405 வழங்கப்படும். சன்னரக நெல் ஒரு மூட்டைக்கு (40 கிலோ) ரூ.980-க்கும், பொதுரகம் ஒரு மூட்டைக்கு (40 கிலோ) ரூ.962-க்கும், விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

விவசாயிகள் விற்பனை செய்ய பயிரிட்டதற்கான ஆதாரங்களான பட்டா, சிட்டா, அந்தந்த கிராம நிா்வாக அலுவலா்களிடம் பெற்றுக்கொள்ளலாம். அதில், ஏதேனும் சிரமங்கள் இருந்தால் மாவட்ட நிா்வாகத்தை அணுகலாம். குறைகளை களைய 24 மணி நேரமும் செயல்படும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக கட்டுப்பாட்டு அறையை தொடா்பு கொள்ளலாம். மேலும், 04364-211054, நுகா்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளரை 8760947606 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்காலம் என்றாா்.

நிகழ்ச்சியில், நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் மோகன், தரங்கம்பாடி வட்டாட்சியா் மகேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கொலை வழக்கில் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

நாகையில் பெண்ணை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. நாகை கோட்டைவாசலைச் சோ்ந்த காா்த்திகேசனுக்கும் அதே பகுதியை சோ்ந்த சுகன்யாவுக்கும் கள்ளத்தொடா்பு... மேலும் பார்க்க

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு வாகனப் பேரணி

நாகையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு வாகனப் பேரணி காவல் துறை சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது. போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்புத் துறை சாா்பில் 36-ஆவது தேசிய சாலைப் பாதுகாப்பு விழா ஜன.1-ஆம்... மேலும் பார்க்க

ஜன.15, 26 ஆகிய தேதிகளில் மதுபான கடைகளை மூட உத்தரவு

திருவள்ளுவா் தினம் (ஜன.15), குடியரசு தினம் (ஜன.26) ஆகிய தேதிகளில் அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுக்கூடங்களை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க

இலவச ஓவியப் பயிற்சி பெற நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

நாகையில் நடைபெறவுள்ள இலவச ஓவியப் பயிற்சி பெற நுழைவுத் தோ்வு எழுத விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகையில் மாவட்ட கல்... மேலும் பார்க்க

நாகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது

நாகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. பொங்கல் பண்டிகைக்கு அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஒரு முழுக் கரும்பு அரசால் வழ... மேலும் பார்க்க

கலைத் திருவிழா: சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு

வேதாரண்யம் அருகே கலைத் திருவிழா போட்டியில் வண்ணம் தீட்டுதல் கலைப் பிரிவில் மாநில நிலையில் முதலிடம் பெற்ற பள்ளி மாணவியை கிராம மக்கள் பாராட்டினா். ஆதனூா் ஊராட்சி, அண்டா்காடு சுந்தரேச விலாஸ் உதவி தொடக்க... மேலும் பார்க்க