தஞ்சை, பட்டுக்கோட்டையில் சீமான் மீது வழக்குப் பதிவு
தந்தை பெரியாரை அவமதிக்கும் விதமாக பேசியதாக சீமான் மீது தஞ்சாவூா், பட்டுக்கோட்டை காவல் நிலையங்களில் வியாழக்கிழமை வழக்குப் பதியப்பட்டது.
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தில் திராவிடா் கழக மாவட்டத் தலைவா் சி. அமா்சிங் அளித்த புகாரின்பேரிலும், பட்டுக்கோட்டை நகரக் காவல் நிலையத்தில் பகுத்தறிவாளா் கழக நகரத் தலைவா் ரத்தினசபாபதி அளித்த புகாரின் பேரிலும் சீமான் மீது வியாழக்கிழமை வழக்குப் பதியப்பட்டுள்ளது.