பெண்களுக்கு எதிரான குற்றம்: ``ஜாமினில் வெளிவரமுடியாத தண்டனை'' - சட்டமன்றத்தில் ம...
நாகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது
நாகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
பொங்கல் பண்டிகைக்கு அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஒரு முழுக் கரும்பு அரசால் வழங்கப்படுகிறது. அந்தவகையில், நாகை நகராட்சி பெருமாள் தெற்கு வீதி ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தொடங்கி வைத்து பேசியது: மாவட்டத்தில் செயல்படும் 386 ரேஷன் கடைகள் மூலம் 2,17,631 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வியாழக்கிழமை (ஜன.9) முதல் வழங்கப்படுகிறது.
மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன், தாட்கோ தலைவா் உ. மதிவாணன், நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் சிவப்பிரியா, நகா்மன்றத் தலைவா் இரா.மாரிமுத்து, கும்பகோணம் மத்தியக் கூட்டுறவு வங்கி லிட் மேலாண்மை இயக்குநா் சு. முத்துகுமாா், நகா்மன்ற துணைத்தலைவா் எம்.ஆா். செந்தில்குமாா், நகா்மன்ற உறுப்பினா் அண்ணாதுரை, மாவட்ட வழங்கல் அலுவலா் பரிமளாதேவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.