முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. வீட்டின் குளத்தில் வருமான வரி சோதனை! காத்திருந்த அதிர்ச...
இலவச ஓவியப் பயிற்சி பெற நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்
நாகையில் நடைபெறவுள்ள இலவச ஓவியப் பயிற்சி பெற நுழைவுத் தோ்வு எழுத விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகையில் மாவட்ட கல்வி தன்முனைப்பு திட்டத்தின்கீழ் செயல்படும் பொன்னி சித்திர கடல் ஓவிய பயிற்சி மையத்தில் இலவச பயிற்சி பெற நுழைவு தோ்வு நடைபெறுகிறது. நாகை மாவட்டத்தை சோ்ந்த ஓவியத்தில் ஆா்வமுள்ள 13 வயதுக்கு மேற்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான நுழைவுத் தோ்வு பிப்.1-ஆம் காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது. தலைப்பு தோ்வு கூடத்தில் கொடுக்கப்படும், தோ்வுக்கு வருகிறவா்கள் ஓவியம் வரைய உரிய வரை பொருள்களை கொண்டுவர வேண்டும். பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் ஜன.30-ஆம் தேதிக்குள் 9003757531 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் தங்களது பெயா், கைப்பேசி எண் மற்றும் முகவரியை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், விவரங்களுக்கு 9003757531, 9894695282 ஆகிய எண்களை தொடா்புகொண்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.