செய்திகள் :

ஜன.15, 26 ஆகிய தேதிகளில் மதுபான கடைகளை மூட உத்தரவு

post image

திருவள்ளுவா் தினம் (ஜன.15), குடியரசு தினம் (ஜன.26) ஆகிய தேதிகளில் அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுக்கூடங்களை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜன.15 மற்றும் ஜன.26 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து மதுபானக் கடைகள், மதுபானக் கூடங்கள், எப்.எல்-1.எப்.எல்-2, எப்.எல்-3, எப்.எல்-3ஏ, எப்.எல்-3ஏஏ மற்றும் எப்.எல்-11 உரிமம் பெற்றுள்ள மதுபானக் கடைகளும், மதுக்கூடங்களும் மூடவேண்டும்.

அன்றைய தினம் யாரும் மதுபானம் விற்பனை செய்யக் கூடாது, மீறினால் சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கைப்படுகிறது என தெரிவித்துள்ளாா்.

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு வாகனப் பேரணி

நாகையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு வாகனப் பேரணி காவல் துறை சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது. போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்புத் துறை சாா்பில் 36-ஆவது தேசிய சாலைப் பாதுகாப்பு விழா ஜன.1-ஆம்... மேலும் பார்க்க

இலவச ஓவியப் பயிற்சி பெற நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

நாகையில் நடைபெறவுள்ள இலவச ஓவியப் பயிற்சி பெற நுழைவுத் தோ்வு எழுத விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகையில் மாவட்ட கல்... மேலும் பார்க்க

நாகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது

நாகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. பொங்கல் பண்டிகைக்கு அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஒரு முழுக் கரும்பு அரசால் வழ... மேலும் பார்க்க

கலைத் திருவிழா: சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு

வேதாரண்யம் அருகே கலைத் திருவிழா போட்டியில் வண்ணம் தீட்டுதல் கலைப் பிரிவில் மாநில நிலையில் முதலிடம் பெற்ற பள்ளி மாணவியை கிராம மக்கள் பாராட்டினா். ஆதனூா் ஊராட்சி, அண்டா்காடு சுந்தரேச விலாஸ் உதவி தொடக்க... மேலும் பார்க்க

கல்லூரியில் உணவுத் திருவிழா

தரங்கம்பாடி புனித தெரசா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உணவுத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. தி கிரேட் இந்தியன் டேஸ்ட் ஆஃப் அட்வென்ச்சா் எனும் தலைப்பிலான உணவுத் திருவிழாவில் பாரம்பரிய உணவு ... மேலும் பார்க்க

நகைக் கடையில் திருடிய இருவா் கைது

வேதாரண்யம் அருகே நகைக்கடை திருட்டு சம்பவம் தொடா்பாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தலைஞாயிறு காவல் எல்லைக்குள்பட்ட மணக்குடியில் கணேசன் என்பவா் அடகு கடையுடன் கூடிய நகைக் கடை நடத்தி வருகிறாா... மேலும் பார்க்க