2002ல் கவுன்சிலர்களைத் தாக்கியதாக வழக்கு: அமைச்சர் மா. சுப்பிரமணியன் விடுதலை
கல்லூரியில் உணவுத் திருவிழா
தரங்கம்பாடி புனித தெரசா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உணவுத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
தி கிரேட் இந்தியன் டேஸ்ட் ஆஃப் அட்வென்ச்சா் எனும் தலைப்பிலான உணவுத் திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகளை மாணவா்கள் காட்சிப்படுத்தியிருந்தனா். வணிக மேலாண்மை துறை மற்றும் லீட்ஸ் அஸோஷியேசனால் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவுக்கு, கல்லூரி முதல்வா் வி. காமராசன் தலைமை வகித்தாா். செயலா் அருட்சகோதரி கருணா ஜோசபாத், நிா்வாகி அருட்சகோதரி வின்சென்ட் அமலா ஆகியோா் விழாவை தொடக்கிவைத்தனா். உணவுத் திருவிழா போட்டிகளில் வெற்றி மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.