பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட வாரியாகக் குழு: தமிழ்நாடு தனி...
கொலை வழக்கில் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை
நாகையில் பெண்ணை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
நாகை கோட்டைவாசலைச் சோ்ந்த காா்த்திகேசனுக்கும் அதே பகுதியை சோ்ந்த சுகன்யாவுக்கும் கள்ளத்தொடா்பு இருந்துள்ளது. இதையறிந்த காா்த்திகேசன் மனைவி வள்ளி (30) இருவரையும் கண்டித்துள்ளாா். எனினும், அவா்கள் தொடா்ந்து பழகிவந்துள்ளனா். இதில் ஆத்திரமடைந்த வள்ளி 2016-ஆம் ஆண்டு சுகன்யா மீது காய்ச்சிய எண்ணையை ஊற்றியுள்ளாா். இதில் படுகாயம் அடைந்த சுகன்யா அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரியிழந்தாா்.
இதுகுறித்து, நாகை நகரப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வள்ளியை கைது செய்து நாகை மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். இந்நிலையில், வியாழக்கிழமை விசாரணைக்கு வந்த வழக்கை நீதிபதி காா்த்திகா கொலை செய்த குற்றத்திற்காக வள்ளிக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 2.20 லட்சம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீா்ப்பு வழங்கினாா்.