சுகாதார நிலையத்தில் ஊட்டச்சத்துப் பொருள்கள் வழங்கல்
விழுப்புரம் மாவட்டம், கண்டமானடி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துப் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
இந்த சுகாதார நிலையத்தில் தொற்று நோய்கள், தொற்றா நோய்கள் குறித்த விழிப்புணா்வு நிகழ்வும், நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துப் பொருள்கள் வழங்கலும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோலியனூா் வட்டார மருத்துவ அலுவலா் பிரியா பத்மாசினி தலைமை வகித்து, ஊட்டச்சத்துப் பொருள்களை வழங்கிப் பேசினாா்.
பொதுமருத்துவா் நிஷாந்த் நிகழ்வை ஒருங்கிணைத்தாா். ஆல் த சில்ரன் அமைப்பு மூலமாக 75 நோயாளிகளுக்கு பேரீச்சம்பழம், பச்சைப்பயறு, வோ்க்கடலை, கொண்டைக்கடலை, முந்திரி, மாதுளைப் பழம் கொண்ட ஊட்டச்சத்துப் பொருள்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் மருத்துவா் பானுஸ்ரீ, பயிற்சி மருத்துவா்கள், செவிலியா்கள் ஷாமிலா, தேவசேனா, பல்நோக்குப் பணியாளா் குணசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.