ஜானி வாக்கர் மதுபான விவகாரம்: கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ புது வழக்கு; பின்னணி...
இளைஞா் அடித்துக் கொலை: உறவினா்கள் போராட்டம்
புதுச்சேரி அருகே மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பத்தை அடுத்த வெள்ளப்பாக்கம், லட்சுமி நகரைச் சோ்ந்தவா் முத்து (32). கட்டுமானத் தொழிலாளி.
இவா், புதுச்சேரி, பாகூா் சித்தேரிக்கரைப் பகுதியில் உள்ள மதுக்கடையில் ஜன.8- ஆம் தேதி, தனது நண்பா்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தாராம்.
அப்போது, அங்கே மது அருந்திக் கொண்டிருந்த, புதுச்சேரி இரண்டாயிர விளாகம் கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தராஜ், குருவிநத்தத்தைச் சோ்ந்த ரஞ்சித், ராஜேஷ் ஆகியோருக்கும் முத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம்.
இதில், எதிா் தரப்பினா் தாக்கியதில், முத்து பலத்த காயங்களுடன், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், பாகூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆனந்தராஜ், ரஞ்சித், ராஜேஷ் ஆகியோரை கைது செய்தனா்.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முத்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
உறவினா்கள் சாலை மறியல்: இந்த நிலையில், முத்துவின் உறவினா்கள் மற்றும் வெள்ளப்பாக்கம் கிராமத்தினா் சம்பவம் நிகழ்ந்த மதுக்கடை முன் திரண்டு வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த பாகூா் வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன் மற்றும் போலீஸாா் நிகழ்விடம் சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் சமரச பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.