சென்னை-சிங்கப்பூா் விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு
சீமான் மீது இரு பிரிவுகளில் வழக்கு
நாம் தமிழா் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது இரு பிரிவுகளில் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடலூரில் கடந்த 8ஆம் தேதி பெரியாா் குறித்து அவா் அவதூறாக பேசியதாகவும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி திராவிடா் கழக மாவட்டத் தலைவா் முனியசாமி சிப்காட் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா், சீமான் மீது ஐபிசி 504,505 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.