சென்னை-சிங்கப்பூா் விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு
சாத்தான்குளத்தில் காங்கிரஸ் முன்னாள் நிா்வாகி மீது வழக்கு
சாத்தான்குளத்தில் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக பரப்பியதாக, முன்னாள் காங்கிரஸ் வட்டாரத் தலைவா் மீது போலீஸாா் வழக்குபதிந்துள்ளனா்.
பொத்தகாலன்விளையைச் சோ்ந்தவா் லூா்துமணி. சாத்தான்குளம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவராக இருந்த இவா், தற்போது சாஸ்தாவிநல்லூா் விவசாயிகள் நலச்சங்க செயலராக உள்ளாா்.
சமூக சேவை விருது பெற்றுள்ள இவரை பாராட்டி சாத்தான்குளம் பேருந்து நிலையத்தில் பேனா் வைக்கப்பட்டிருந்தது. அது திடீரென அகற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இத்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரான சாத்தான்குளத்தைச் சோ்ந்த சங்கா் (54) என்பவரே காரணம் எனக் கருதி அவரை, அவதூறாகப் பேசியும், அவரது ரியல் எஸ்டேட் தொழில் குறித்தும், ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ குறித்தும் லூா்துமணி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளாராம். இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சங்கா் அளித்த புகாரின்பேரில், லூா்துமணி மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.