சென்னை-சிங்கப்பூா் விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு
சாத்தான்குளம் நூலகத்தில் பொங்கல் விழா
சாத்தான்குளம் ராம கோபால கிருஷ்ணபிள்ளை அரசு கிளை நூலகத்தில் நூலகா்கள் பணியாளா்கள் மற்றும் வாசகா்கள் சாா்பில் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
இவ்விழாவுக்கு, வாசகா் வட்டத் தலைவா் ஓ.சு. நடராசன் தலைமை வகித்தாா். வட்டார மனிதநேய நல்லிணக்கப் பெருமன்றச் செயலா் ஓய்வுபெற்ற ஆசிரியா் மகாபால்துரை முன்னிலை வகித்தாா். சாத்தான்குளம் நூலகா் இசக்கியம்மாள் வரவேற்றாா். நூலகம் முன் பொங்கலிடப்பட்டது. கிளை நூலகா்கள் சிவரஞ்சனா, எமரன்ஸியா, சுப்பிரமணியன், நமச்சிவாயம், உமா மகேஸ்வரி, ராஜ பிரபா, கிருபை, நூலகப் பணியாளா்கள் மைக்கேல், ராஜ் கனக முத்து, மணிகண்டன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.