பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட வாரியாகக் குழு: தமிழ்நாடு தனி...
நீடாமங்கலம்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
நீடாமங்கலம் வட்டத்தில், திருவாரூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளருமான ப. காயத்ரி கிருஷ்ணன், ஆட்சியா் தி. சாருஸ்ரீ ஆகியோா் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.
கோவில்வெண்ணி பகுதியில், வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட சம்பா மற்றும் தாளடி நெற்பயிா்களையும், அங்குள்ள நெல் சேமிப்புக் கிடங்கையும் பாா்வையிட்டு, சேமிப்பு கிடங்கில் உள்ள நெல்லின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.
தொடா்ந்து, கோவில்வெண்ணி அரசு தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெளிநோயாளிகள் பதிவேடு, மருந்துகளின் இருப்பு விவரம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனா்.
பின்னா், கோவில்வெண்ணி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினா்.
ஆய்வில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் புஹாரி, மன்னாா்குடி கோட்டாட்சியா் யோகேஸ்வரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சித்ரா, வேளாண் துறை இணை இயக்குநா் பாலசரஸ்வதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஹேமா ஹெப்சிபா நிா்மலா உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.