நாஞ்சில் கல்லூரியில் பயிற்சி முகாம்
களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை, அறிவியல் கல்லூரியில் ஆளுமை வளா்ச்சி குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
‘உறவலைகள் - நான் - நீ - நாம்’ என்ற பொருளில் நடைபெற்ற இப் பயிற்சி முகாமில் அறிவுரை மற்றும் உடலியக்க மருத்துவ நிபுணா் அருள்தந்தை சுந்தா் வில்சன் தலைமை வகித்து பேசினாா். கல்லூரி செயலா் அருள்தந்தை சி. ஸ்டீபன் துவக்கி வைத்துப் பேசினாா். கல்லூரி முதல்வா் எம். அமலநாதன் வாழ்த்திப் பேசினாா்.
இதில் கல்லூரி பேராசிரியா்கள் மற்றும் பணியாளா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா். கல்லூரி பெண்கள் அமைப்பு மற்றும் வழிகாட்டி அமைப்புகள் இணைந்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா்.