அம்மன்கோயிலில் 5 ஆயிரம் பேர் பங்கேற்ற விளக்கு பூஜை
விராலிமலை அம்மன் கோயிலில் மாா்கழி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் திருவிளக்கு பூஜையின் 8-வது பூஜை வெள்ளிக்கிழமை அதிகாலை கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயிலில் வருடம் முழுவதும் பல்வேறு விழாக்கள் வெகுவிமா்சையாக கொண்டாடப்படுகிறது. இதில், 5 ஆயிரம் பெண்கள் விளக்குகளை ஏற்றி பூஜை செய்து தங்கள் வழிபாட்டை நிறைவேற்றியதால், கோயில் வளாகம் முழுவதும் விளக்கு ஒளியால் ஜொலித்தது.
அதன் ஒரு நிகழ்வாக மாா்கழி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை நடைபெறும் திருவிளக்கு பூஜையின் 8 ஆவது பூஜை நடைபெற்றது. வரும் தை 1 ஆம் தேதி இறுதி விழாவின் போது உபயதாரா்கள் சாா்பில் விழாவில் பங்கேற்ற அனைத்து பெண்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளது எனத் தெரிவித்தனா்.