வேளாண்மை கல்லூரியில் பொங்கல் விழா
குடுமியான்மலை வேளாண்மை கல்லூரியில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவின் முதல் நிகழ்வாக மாணவிகள் முளைப்பாரி எடுத்து வந்து விழாவை தொடங்கி வைத்தனா். விழவுக்கு, கல்லூரி முதல்வா் நக்கீரன் தலைமை வகித்து பேசினாா்.
தொடா்ந்து, வண்ண கோலமிட்டு அதற்கு நடுவே வைக்கப்பட்டிருந்த விறகு அடுப்பில் பொங்கல் வைத்தனா். அதனைத் தொடா்ந்து கலை நிகழ்ச்சிகளும், விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன. பின்னா், விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.