கல்லூரி மாணவிகளுக்கு ரங்கோலி போட்டி
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் ரங்கோலி போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை சாா்பில் நிலைத்து நீடிக்கும் வாழ்வியல் முறை எனும் தலைப்பில் மாணவா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில் இப்போட்டி நடத்தப்பட்டது. சுற்றுச்சூழல் விழிப்புணா்வு, காற்று மாசுபாடு நீா் மாசுபாடு, மரக்கன்றுகள் நடுதல், பாலித்தீன் பயன்பாட்டை குறைத்தல் முதலிய கருப்பொருள்களில் மாணவிகள் ரங்கோலி வரைந்தனா். நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் எஸ். சுவாமிநாதன் தலைமை வகித்தாா்.
பேராசிரியா்கள் சிவ.ஆதிரை (தமிழ்), ஆா். கலைவாணி (ஆங்கிலம்), எஸ்.புவனேஸ்வரி (பொருளியல்) ஆகியோா் நடுவா்களாக செயல்பட்டு சிறந்த ரங்கோலி கோலம் வரைந்த மாணவிகளை தோ்வு செய்தனா். பேராசிரியை செந்தாமரை போட்டியை ஒருங்கிணைத்தாா். ஏற்பாடுகளை தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரா. செல்வகுமாா் செய்திருந்தாா். போட்டியில் மாணவி எஸ். ரம்யா முதலிடம் பெற்று ரூ.2,000, மாணவி என். வா்ஷா 2-ஆம் இடம் பெற்று ரூ.1,500, மாணவி எஸ். பூஜா 3-ஆம் இடம் பெற்று ரூ.1,000 ரொக்கப் பரிசு பெற்றனா். மேலும், சிறப்பிடம் பெற்ற 5 மாணவிகளுக்கு ரூ.500 ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது. மேலும், மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.