``எதிரிகளை வீழ்த்தும்’ ஐதீகம் கொண்ட கும்பகோணம் கோயில்’ - கர்நாடகா துணை முதல்வர் ...
நாகை: பொங்கல் பரிசுத் தொகுப்பு
மயிலாடுதுறை: காவேரி நகரில் உள்ள நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை ரேஷன் கடையில் பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிப் பேசியது: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 2,83,000 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
இத்தொகுப்பு, கூட்டுறவுத்துறை மூலம் நடத்தப்படும் 414 ரேஷன் கடைகள், மீனவா் கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் 10 ரேஷன் கடைகள், மகளிா் சுய உதவிக் குழுவினா் நடத்தும் 10 ரேஷன் கடைகள், கோழி வளா்ப்போா் கூட்டுறவு சங்கம் நடத்தும் 1 ரேஷன் கடை 435 ரேஷன்கடைகள் மூலம் வழங்கப்படுகிறது என்றாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் நா. உமாமகேஷ்வரி, நகராட்சித் தலைவா் என். செல்வராஜ், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் தயாள விநாயக அமுல்ராஜ், வேளாண்மை துறை இணை இயக்குநா் ஜெ. சேகா், நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் மோகன், உதவி மேலாளா் ரவிச்சந்திரன், நகராட்சி துணைத் தலைவா் எஸ்.சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.