விக்கிரவாண்டி: சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்; கைதான மூவருக்கு ஜாமீன்!
கல்லூரி பேராசிரியா்களுக்கு 5 நாள் பயிற்சி முகாம்
மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. பொறியியல் கல்லூரியில் கல்லூரி பேராசிரியா்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு நிறுவனமாகிய ஐ.சி.டி. அகாதெமி மற்றும் மத்திய அரசின் மினிஸ்ட்ரி ஆஃப் எலக்ட்ரானிக்ஸ் அன்டு இன்பா்மேஷன் இணைந்து நடத்தும் 5 நாள் முகாம் அண்மையில் தொடங்கியது.
தொடக்க விழாவுக்கு, கல்லூரி இயக்குனா் எம். செந்தில்முருகன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் பி. பாலசுப்ரமணியன் முதன்மை விருந்தினராக பங்கேற்று, கல்வியில் மேம்பட்ட தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதை வலியுறுத்தினாா். நிகழ்ச்சியை, துணை முதல்வா் எஸ். செல்வமுத்துக்குமரன் மற்றும் ஆா். கனிமொழி, வி. பத்மாவதி ஆகியோா் ஒருங்கிணைத்தனா். முகாமில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகளைச் சோ்ந்த 30 பேராசிரியா்கள் பங்கேற்றுள்ளனா்.