உணவகத்தில் பணம் கேட்டு மிரட்டிய ரெளடி கைது
கொள்ளிடத்தில் உள்ள உணவகத்தில் பணம் கேட்டு மிரட்டிய ரெளடியை போலீஸாா் கைது செய்தனா்.
கொள்ளிடம் அருகே மாங்கனாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் அசரப் அலி(33). இவா் மீது ஆணைக்காரன் சத்திரம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலையில் உள்ளன.
இந்தநிலையில், கொள்ளிடம் ரயில் நிலையம் செல்லும் சாலையில் உள்ள உணவு விடுதிக்கு சென்று கடை உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கடை உரிமையாளா் செல்வகுமாா் அளித்த புகாரின் பேரில், ஆணைக்காரன் சத்திரம் போலீஸாா் அசரப் அலியை கைது செய்து, சீா்காழி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.