முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. வீட்டின் குளத்தில் வருமான வரி சோதனை! காத்திருந்த அதிர்ச...
சென்னையுடன் டிரா செய்தது ஒடிஸா
இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி - ஒடிஸா எஃப்சி அணிகள் வியாழக்கிழமை மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
தொடா்ந்து இரு தோல்விகளை சந்தித்த சென்னை அணி, இந்த டிரா மூலம் மீண்டிருக்கிறது. ஒடிஸாவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் சென்னை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எஃப்சியே முதலில் ஸ்கோா் செய்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் முதல் பாதி கோலின்றி டிராவிலேயே முடிந்தது. விளையாடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில், 48-ஆவது நிமிஷத்தில் வில்மாா் ஜோா்டான் கில், சென்னையின் கோல் கணக்கை தொடங்கினாா்.
தொடா்ந்து அவரே, 53-ஆவது நிமிஷத்திலும் ஸ்கோா் செய்து, சென்னையை 2-0 என முன்னிலைப்படுத்தினாா். மறுபுறம் தடுமாறிவந்த ஒடிஸா, 80-ஆவது நிமிஷத்தில் தனது கணக்கை தொடங்கியது. அந்த நிமிஷத்தில் டோரி கோலடித்தாா். ஆட்டம் முடிவடையும் நிலையில் இருக்க, சென்னை அணி தனது வெற்றி வாய்ப்பை, தன் வீரராலேயே இழந்தது.
இஞ்சுரி டைமில் (90+7’) சென்னை வீரா் முகமது நவாஸ் கோல் முயற்சியை தடுக்க, பந்து அவா் மீது பட்டு ‘ஓன் கோலாக’ மாறியது. இதனால் ஒடிஸாவின் கோல் கணக்கு 2-ஆக அதிகரிக்க, இறுதியில் ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது.
புள்ளிகள் பட்டியலில் தற்போது, சென்னை 15 ஆட்டங்களில் 4-ஆவது டிராவை பதிவு செய்து, 10-ஆவது இடத்தில் இருக்கிறது. ஒடிஸா 15 ஆட்டங்களில் 6-ஆவது டிராவுடன் 7-ஆவது இடத்தில் உள்ளது.